விஜய் விவாகரத்து விவகாரம்.. சங்கீதாவுக்கு இலங்கை எம்.பி கண்டனம்… வீடியோ வைரல்!

Vijay-Sangeeta Affair Case: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அவரது மனைவி சங்கீது விவகாரத்து வழக்கில் சங்கீதாவுக்கு எதிராக இலங்கை மாநிலம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அர்ச்சுனா எம். பி. வீடியோ மூலமாக கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் விவாகரத்து விவகாரம்.. சங்கீதாவுக்கு இலங்கை எம்.பி கண்டனம்... வீடியோ வைரல்!

விஜய் மனைவி சங்கீதாவுக்கு இலங்கை எம்பி கண்டனம்

Updated On: 

09 Mar 2026 14:29 PM

 IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறி அவரது மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த விவகாரம் விஜயின் அரசியல் வட்டாரம் மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, விவாகரத்து தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், விஜய் தனக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், சென்னையில் உள்ள வீட்டில் தங்குவதற்கு அனுமதி மறுப்பதாகவும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் ஒரு மனுவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால், விஜய்க்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. விஜய்- சங்கீதா விவகாரத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சங்கீதாவுக்கு இலங்கை எம்பி கண்டனம்

இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இலங்கை எம்பி அர்ச்சுனா சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் நடைபெற்று 27 ஆண்டுகள் காத்திருந்து ஒருவர் தனது வாழ்வின் உச்சகட்டத்தில் உயர்ந்து நிற்கும் போது, அவரது காலை வாரி விட்டுள்ளீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று சொல்லுங்கோ. அங்கு உங்களுக்காக பெரிய கோவிலை கட்டி மாலை போட ஆசைப்படுகிறேன். எப்படிப்பட்ட இன பிறப்பு என்று யோசித்துப் பாருங்கள். எனக்கு இதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை.

மேலும் படிக்க: திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள்.. கறார் காட்டும் விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகள்.. காரணம் என்ன!

தமிழனாக இருப்பதில் வருத்தப்படுகிறேன்

ஒரு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணத்து தமிழனாகவும் இதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன் என்று அந்த வீடியோவில் அர்ஜுனா எம்பி தனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. விஜய்- சங்கீதா விவகாரத்து தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், விவகாரத்து விஷயத்தை மறைமுகமாக வொர்த் இல்லை என்று விஜய் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

விஜய்-சங்கீதா விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு

இவரது கருத்து பெண்கள் மத்தியில் மரியாதை குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டன. இதனை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக உள்ள ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதில், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் நீங்கள், பெண்களுக்கான மதிப்பை அளிக்காத வகையில் பேசி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதாவை கண்டித்து இலங்கையை சேர்ந்த எம். பி. கருத்து தெரிவித்துள்ளது மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை கூட்டி உள்ளது.

மேலும் படிக்க: V. Senthil Balaji Tamil Nadu Election: கட்சி மாற்றம்.. சிறைவாசம்.. தொடர் வெற்றியை வசமாக்குவாரா செந்தில்பாலாஜி?

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு