சினிமாவில் இருந்து என்ன அனுப்பிட்டீங்கனா… முதல்வர் முன் சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan : தமிழ்நாடு அரசு சார்பாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னிடம் 2 டிகிரி இருப்பதாகவும், ஒருவேளை சினிமாவில் இருந்து விலகினால் வேலைக்கு செல்வேன் என்றும் பேசினார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை எடுத்து சொல்லும் வகையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) செப்டம்பர் 25, 2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்ற இரண்டு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு
அரசு நலத்திட்டங்கள் வழங்குவது எவ்வளவு சிறப்பான விஷயமோ, அதே மாதிரி மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்பது மிகவும் சிறப்பான விஷயம். உலகில் இருக்கும் செல்வங்களை விட கல்வி மிக உயர்ந்தது. நான் 3 வேளையும் நன்றாக சாப்பிட்டு தான் பள்ளிக்கு சென்றேன். காரணம் என் அப்பா ஒருவேளை மட்டும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்ற காரணத்தால் தான். நான் ஆட்டோவிலும், பேருந்திலும் பள்ளிக்கு சென்றேன். எங்க அப்பா நடந்து பள்ளிக்கு சென்ற காரணத்தால் தான்.
இதையும் படிக்க : முதலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி விசுவாசமாக இருக்கட்டும் – செல்வப்பெருந்தகை..




ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறை நன்றாக இருக்கும். எங்க அப்பா ஒரு டிகிரி தான் படிச்சாரு. ஆனா அவருடைய பையன் என்னை இரண்டு டிகிரி படிக்க வைச்சாரு. என்னுடைய அக்கா 3 டிகிரி முடிச்சிட்டாங்க. நான் சினிமாவில் நடிக்கிறேன். எனக்கு இருக்கும் பெரிய நம்பிக்கை ஒன்றே ஒன்று தான். சினிமா துறை மிகவும் சவாலானது. எந்தவொரு பின்னணியும் இல்லாமல் இந்த துறையில் நுழைவது அசாத்தியமானது. எனக்கு சவால் வரும்போதெல்லாம் எனக்கு இருக்கும் ஒரே தைரியம் என்னிடம் 2 டிகிரி இருக்கு என்பது தான். இங்க இருந்து அனுப்புச்சிட்டீங்கனா, ஏதாவது வேலை செய்தாவது பிழைச்சுக்க முடியும் என்றார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து தியாகராஜன் குமாரராஜா
இதையும் படிக்க : சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!
பின்னர் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா பேசியதாவது, “கல்வி அவரை எனக்கு சமமாக மாற்றும் அல்லது என்னை அவருக்கு சமமாக ஏற்றும், இதனால்தான் இடைக்காலத்தில் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது. முன்னர், ஏகலைவனிடம் கட்டை விரலை காணிக்கையாக கேட்டது போல, கற்றது எல்லாம் மறந்துபோக வேண்டும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்ததைப் போல, இப்போது புதிய கல்விக் கொள்கை வந்திருக்கிறது என்று பேசினார்.