Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலியாக உள்ள 2,417 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

M.K.Stalin: சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து முடித்த 1,231 மாணவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணியிட நியமன ஆணைகளை வழங்கினார்.

காலியாக உள்ள 2,417 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செவிலியர்களுக்கு பணி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Sep 2025 20:35 PM IST

சென்னை, செப்டம்பர் 22, 2025: தமிழக அரசு, மக்களுக்கு அடிப்படை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செப்டம்பர் 22, 2025 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து முடித்த 1,231 மாணவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணியிட நியமன ஆணைகளை வழங்கினார்.

புதிய சுகாதார மையங்கள்

இந்த நிகழ்வில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு 5,000 கிராம மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார மையம் மற்றும் ஒவ்வொரு 10,000 நகர மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார மையம் என அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், தற்போது மாநிலம் முழுவதும் 8,713 கிராம சுகாதார மையங்களும், 2,368 நகர சுகாதார மையங்களும்  செயல்பட்டு வருகின்றன.
மேலும், 2025 ஆம் ஆண்டில் 642 புதிய சுகாதார மையங்கள் கிராமப்புறங்களிலும், நகர்பறங்களிலும் தொடங்கப்படவுள்ளன என்றார்.

இதையும் படிக்க : பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

புதிய செவிலியர் பணிகள்

கிராம சுகாதார மையங்களில் செவிலியர்கள் தாய் சேய் நலப்பணிகள், தடுப்பூசி, குடும்ப நலத்திட்டங்கள், கருத்தடை ஊக்குவிப்பு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், பெண்களுக்கு மருத்துவ உதவிகள், ரத்தச்சோகையை குணப்படுத்தும் மருந்துகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை வழங்குதல், குடும்ப பதிவுகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்கிறார்கள்.

அதேபோல், செவிலியர்கள் முதன்மை சுகாதார மையங்களில் வெளிநோயாளி சிகிச்சை, பிரசவ சேவைகள், ரத்த அழுத்த பரிசோதனை, தடுப்பூசி, முதலுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கின் காரணமாக, காலியாக இருந்த செவிலியர் பணியிடங்களை நிரப்ப இயலாமல் இருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, 25.07.2023க்கு முன் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வெளிப்படையான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தி 1,231 பேரை தேர்வு செய்து நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,417 காலியிடங்கள் விரைவில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

 இதையும் படிக்க : ஆகஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்த வைத்தபோது மெய் சிலிர்த்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

நன்றி தெரிவித்த சங்கங்கள்

இந்த நியமன ஆணைகளுக்கு, தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம், செவிலியர் நலச்சங்கம், கிராமிய சுகாதார செவிலியர் சங்கம் ஆகியவை முதல்வருக்கு நன்றி தெரிவித்தன.