ஆகஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்த வைத்தபோது மெய் சிலிர்த்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
M.K.Stalin: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 20, 2025 அன்று நடைபெற்ற ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பெரியாரின் சிலையை திறந்து வைத்த அனுபவம் குறித்து பேசினார்.

சென்னை, செப்டம்பர் 20: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), செப்டம்பர் 20, 2025 அன்று நடைபெற்ற ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், தனது சமீபத்திய ஐரோப்பிய பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஐரோப்பிய நாடுகளில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துரைத்ததாக அவர் கூறினார். குறிப்பாக ஜெர்மனி மற்றும் லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை தாண்டி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவது அவர்களுக்கு வியப்பாக இருந்ததாகவும், இதனால் அவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.
ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் சிலை திறப்பு குறித்து முதல்வர்
அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகளைப் போல் தமிழ்நாட்டு மக்களும் பொது இடங்களில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து அவரைப் பற்றி பேசியபோது, “அந்த தருணம் எனக்கு மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். முதல்வரின் இந்த உரையாடல், கல்வி, முதலீடு மற்றும் சமூக பொறுப்பு குறித்து அவரது பார்வையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.




இதையும் படிக்க : பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
முதல்வர் பேசிய வீடியோ
ஐரோப்பியப் பயணமும் – #Oxford நினைவுகளும்!#CMStalinInEurope #PeriyarAtOxford #TNRising #DravidianModel #UngalilOruvanAnswers pic.twitter.com/0cskpF47Ax
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 20, 2025
இடஒதுக்கீடு குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பிறந்து லண்டனில் வசிப்பவர்கள் யாரை சந்தித்தாலும் இடஒதுக்கீடால் முன்னேறிதான் வெளிநாடு வந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நான் முதல் தலைமுறை பட்டதாரி. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்தது தான். நான் இந்த அளவுக்கு முன்னேறி வரக் காரணம். அரசு பள்ளியில படிச்சு இப்போ லண்டனில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் நம் அரசு கொண்டு வந்த ஸ்காலர்ஷிப் உதவியுடன் இங்க இருக்கோம்னு சொன்னாங்க. இந்த மாதிரி மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதா என்னுடைய ஐரோப்பிய பயணம் இருந்தது என்றார்.
இதையும் படிக்க : நாளை நாகை, திருவாரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்..
முன்னதாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிகட்டங்களை அவர் திறந்து வைத்தார்.