Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் – ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

CM MK Stalin Speech: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ ஒரு இனத்திற்கே சுயமரியாதையை ஊட்டி முன்னேறச் செய்தவர் பெரியார்” என பேசியுள்ளார்.

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் – ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவ படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2025 14:24 PM IST

லண்டன், செப்டம்பர் 5, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். தனது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், லண்டனில் செப்டம்பர் 5, 2025 அன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதுடன், தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தையும் திறந்து வைத்தார். அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் பேசுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் பேசுகிறேன் – மு.க ஸ்டாலின்:


அவர் மேலும், “பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கி வரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்காசிய நாட்டின் அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான திமுகவின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்லாமல், பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடனும் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

மேலும் படிக்க: ‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!

ஒரு இனத்திற்கே சுயமரியாதையை ஊட்டி முன்னேறச் செய்தவர் பெரியார். 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி இங்கு நடந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்க தலைவர் கி. வீரமணி பங்கேற்றார். அதன் பிறகு, தற்போது பெரியாரை பற்றி உரையாற்ற வந்திருக்கிறேன். உலகில் எந்த சொல்லை கொண்டு வந்தாலும் ‘சுயமரியாதை’ என்ற சொல்லுக்கு ஈடாகாது” எனக் கூறினார்.

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம்:

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நடந்த திருமணத்திற்கு அவர் வந்திருக்கிறார்; நான் அவருக்கு உணவு பரிமாறியிருக்கிறேன். இதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது” என அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: ’10 நாள் தான் டைம்.. இல்லையெனில்..’ எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்.. அடுத்த பிளான் இதுதான்!

பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும் – முதல்வர் ஸ்டாலின் பதிவு:


மேலும், இந்த நிகழ்ச்சி தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்” என குறிப்பிட்டுள்ளார்.