Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’10 நாள் தான் டைம்.. இல்லையெனில்..’ எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்.. அடுத்த பிளான் இதுதான்!

AIADMK Leader Sengottaiyan : அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். அப்படி இல்லையெனில் ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியை ஒருங்கிணைத்தால் தான் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

’10 நாள் தான் டைம்.. இல்லையெனில்..’ எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்.. அடுத்த பிளான் இதுதான்!
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Sep 2025 11:34 AM IST

சென்னை, செப்டம்பர் 05 : அதிமுகவினரை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக் கெடு கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லை என்றால் நாங்களே அந்த முன்னெடுப்போம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி 6 தலைவர்கள் சென்று அதிமுக ஒன்றிணைக்க வலியுறுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தலுக்கு ஓராண்டு முன்பே அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இதற்கிடையில், அதிமுகவில்  உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, அதிமுகவில் இருந்து பிரிந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை ஒன்றிணைக்க வேண்டும்  என  அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமியோ  அதற்கு மறுப்பு தெரிவித்து, மவுனம் காத்து வருகிறார்.  இதனால், எடப்பாடி பழனிசாமி மூத்த தலைவர் செங்கோட்டையன் பல மாதங்களாக அதிருப்தியில் இருந்து வருகிறார்.  மேலும், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சமீபத்தில் அழுத்தமாக கூறினார். ஆனால், இதற்கும் எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்து வருகிறார்.  இதற்கிடையில், கடந்த மூன்று தினங்களுக்கு 2025 செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக கூறியிருந்தார்.  இந்த நிலையில்,  ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Also Read : மறப்போம்.. மன்னிப்போம்.. ஒன்றுபட்ட அதிமுக தேவை.. செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்

அப்போது பேசிய அவர், ”மறப்போம், மன்னிப்போம் என செயல்பட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு வைத்துள்ளேன். அதற்குள் ஒருங்கிணைப்பு நடக்கவில்லை என்றால் இந்த மனநிலையில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, வெற்றிகரமாக நினைத்ததை முடிக்க முயல்வோம். யார் யாரையெல்லாம் இணைப்பது என்பது பொதுச் செயலாளரேயே முடிவு செய்யட்டும்.

இருப்பினும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களை நியமிக்க வேண்டும் என்பது என் கோரிக்கையாக உள்ளது. தென் மாவட்டங்களில் கட்சியின் நிலை என்ன என்ப்து உங்களுக்கே தெரியும். எனவே, அனைவரும் ஒருங்கிணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுகவை ஒன்றிணைக்க நான் நந்தம் விஸ்வநாதன், வேலுமுணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் பொதுச் செயலாளரை சந்தித்தோம். ஆனால், அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்ஜிஆர் சொல்லிக் கொடுத்த பாடம்.

Also Read : ’நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. அதிமுக ஒன்றிணையனும்’ சசிகலா சொன்ன விஷயம்!

அடுத்த கட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன். இபிஎஸ் மனநிலை எனக்கு தெரியாது. என் மனநிலை அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான். விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே எடப்பாடி பழனிசாமியுடன் சுற்றுப் பயணத்தி கலந்து கொள்ளவில்லை” எனக் கூறினார். இந்த பேட்டியில் ஒரு இடத்தில் கூட, எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.