‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!
AIADMK Internal Issues : அதிமுகவின் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் எனவும் சசிகலா அறிக்கை வாயிலாக தெரிவித்து இருக்கிறார். மனதின் குரலாகவே செங்கோட்டையன் பேசுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

சென்னை, செப்டம்பர் 05 : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார். இல்லையெனில் அதிமுக ஒருங்கிணைக்க நாங்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வோம் என செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இவரது பேச்சு அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளித்துள்ளனர். அதிமுக மீண்டும் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே இப்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வந்த நிலையில், அதனை சீனியர் தலைவர்கள் தலையீட்டு சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதிமுக ஒன்றிணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமியோ மறுத்து வருகிறார். இதனால், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமலும், பரப்புரையில் கலந்து கொள்ளாமலும் இருந்து வருகிறார். இது தொடர்பாக, 2025 செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கப் போவதாகவும், தனது மனதில் உள்ளதை எல்லாம் வெளிப்படையாகவே கூறுவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். அதன்படி, 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Also Read : மறப்போம்.. மன்னிப்போம்.. ஒன்றுபட்ட அதிமுக தேவை.. செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு




அப்போது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி அதை செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த நடவடிக்கை நாங்களே தொடர்வோம் என கூறியிருக்கிறார். அதோடு, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்தால் தான், வெற்றி பெற முடியும் என கூறி உள்ளார். செங்கோட்டையன் பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
“தனது மனதின் குரலை வெளிப்படுத்தியுள்ளார்”
இதற்கு ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர். செங்கோட்டையனின் பேச்சு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ” அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுகவை வளர்க்க உதவியர் செங்கோட்டையன்.
இன்று ஒருங்கிணைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். அவரின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். நாங்களுக்கு அதற்காக தான் பேராடிக் கொண்டிருக்கின்றோம். எந்த தேர்தலிலும் பெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது. ஒருங்கிணைத்தால் மட்டும் தான் வெல்ல முடியும்” என்றார்.
சசிகலா சொன்ன முக்கிய விஷயம்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் மேற்கொடுள்ள முயற்சி நல்ல விஷயம். அதிமுக ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக இருக்கிறோம். திமுக-வை தவிர அனைவரும் ஓரணியில் வரவேண்டும்” என தெரிவித்தார்.
Also Read : என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன்.. ரிப்ளை கொடுத்த செங்கோட்டையன்.. அடுத்து என்ன?
மேலும், இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றுபடுவோம்.. வென்று காட்டுவோம். நாளை நமதே. வெற்றி நிச்சயம். அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாது பேரியக்கம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். அதிமுக ஒன்றுபட எப்படி தடை போட்டலும், அவற்றை தவிடுபொடியாக்கி மீண்டும் இணைவோம். செங்கோட்டையன் கருத்து தான் எனது கருத்து” என குறிப்பிட்டார்.