பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
CM MK Stalin: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழ்கடலில் அகழாய்வு பணி தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின், “ "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்” என பதிவிட்டுள்ளார்.

சென்னை, செப்டம்பர் 20, 2025: “வளம் பெற்ற பூம்புகாரின் பெருமையை விழிப்புணர்வோம்” என ஆழ்கடல் ஆய்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழ்கடலில் அகழாய்வு பணி தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். 2025 மற்றும் 2026 நிதியாண்டுகளில், பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடலில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு – அமைச்சர் தங்கம் தென்னரசு:
பேராசிரியர் கே. ராஜன் மற்றும் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு இப்பணியை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு. மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட
மேலும் படிக்க: விஜய் பிரச்சாரம் பயணத்தில் மாற்றம்.. செப். 27 சென்னையில் பிரச்சாரம் இல்லை..
இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப் பணியினைஇ பேராசிரியர் திரு. கே. ராஜன் அவர்களின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் திரு. சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூலிக்கப்படுவது ஏன்? – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!
பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர் ஸ்டாலின்:
அதேபோல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில், “கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்! அடுத்து, “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்…” என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!! என குறிப்பிட்டுள்ளார்.