Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிபிஐ விசாரணை…. அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக? – என்ன செய்யப்போகிறார் விஜய்?

TVK Vijay : கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விஜய், பாஜக மற்றும் அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிபிஐ விசாரணை…. அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?  – என்ன செய்யப்போகிறார் விஜய்?
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Oct 2025 14:58 PM IST

சென்னை, அக்டோபர் 15: கரூரில்  (Karur) நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்பரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அக்டோபர் 13, 2025 அன்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்குப் பின்,  விஜய்யின் (Vijay) அடுத்த அரசியல் முடிவு என்ன என்பது குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்ப பாஜகவின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக கூட்டணியில் பெரிய சக்தி இணையப்போகிறது என மறைமுகமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து விஜய் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

சிபிஐ விசாரணை

தவெக பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடு என ஒரு தரப்பினரும், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என ஒரு தரப்பும் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இதனையடுத்து தமிழக காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனக்கூறி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : நீதி வெல்லும்…. – கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் – விஜய் கமெண்ட்

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 13, 2025 அன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீதி வெல்லும் என தனது எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் விஜய்?

இந்த தீர்ப்புக்கு பின் பாஜகவும், அதிமுகவும் திறந்த மனதுடன் விஜய்யை தங்களது கூட்டணிக்குள் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளன. விஜய்யின் திரையுலக புகழும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் பேராதரவும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் திமுக எதிர்ப்பு வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என பாஜகவும் அதிமுகவும் நம்புகின்றன. அதற்கு ஏற்ப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையில் தவெக கொடியை பார்க்க முடிகிறது.  அதற்கு ஏற்ப கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகவே எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து வருகிறார்.

இதையும் படிக்க : Karur Stampede: கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மற்றொரு பக்கம் தவெகவினர் இதனை மறுக்கின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தைக்கான நேரம் இதுவல்ல என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விஜய் பாஜக கூட்டணியில் சேருவது சந்தேகம் எனவும், ஆனால் பாஜக, அதிமுகவை விமர்சிப்பதை இனி குறைத்துக்கொள்வார் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். திமுகவை ம்டடுமே இனி அவர் குறிவைத்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.