முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..
Annamalai On DMK Government: முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, அக்டோபர் 15, 2025: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேறி முத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்காக அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை:
தமிழக அரசு தரப்பில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு, அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், இந்த முகாம் அக்டோபர் 31, 2025 வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வடகிழக்கு பருவமழை எப்போது? – பிரதீப் ஜான் வெளியிட்ட தகவல்!
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேறி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமிற்காக அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? அண்ணாமலை கேள்வி:
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, எந்தத் துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே… pic.twitter.com/RlyFyDvvj0
— K.Annamalai (@annamalai_k) October 14, 2025
இதுகுறித்து தனது பதிவில் அவர், “ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக எந்த துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல் வெற்றிப் பலபரப்புகளிலேயே நாட்களை கடத்திவிட்டு தற்போது ஆட்சி முடியும் தருவாயில், முகாம் நடத்துகிறோம், குறை தீர்க்கிறோம் என்று, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் தமிழக அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்தது என்பதற்கு, இப்போது அவசர அவசரமாக ஆங்காங்கே நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி.
மேலும் படிக்க: தீபாவளி டிமாண்ட் – கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஆம்னி பேருந்துகள் – எவ்வளவு தெரியுமா?
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா? ஏற்கனவே திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தியதை, நாங்கள் கண்டித்த உடன், இனி இப்படி நடைபெறாது என்று உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இவற்றை எதையும் கண்டுகொள்ளாமல், மாதம்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலாவில் பிசியாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.