அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழை..
Tamil Nadu Rain Alert: தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு நல்ல மழை பதிவு இருந்து வருகிறது.

வானிலை நிலவரம், அக்டோபர் 15, 2025: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், நாளை முதல் அதாவது அக்டோபர் 16, 2025 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பதிவாகி வருகிறது. இந்த மழை வரும் நாட்களில் தீவிரமடைய கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும் என்றும், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, வடக்குக் கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் நாளை அதாவது அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் அக்டோபர் 19, 2025-ஆம் தேதியளவில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில், கேரள-கர்நாடகப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வடகிழக்கு பருவமழை எப்போது? – பிரதீப் ஜான் வெளியிட்ட தகவல்!
இதன் காரணமாக, அக்டோபர் 15, 2025 இன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய நிலையில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் அக்டோபர் 19, 2025 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியான கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி…. வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி முதல் சென்னை வரை இனி மழை தான் – பிரதீப் ஜான்:
Sudden sharp showers will increase in KTCC (Chennai) and other coastal areas from today. Rains will pick up and increase in intensity from 15-18th October
===========
The clouds from sea moving into Sea into KTCC is a beautiful sight. Enjoy the short intense burst today. The… pic.twitter.com/dWNTK8guWg— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2025
தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்த மழை வரும் நாட்களில் தீவிரமடையக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், இனி தூத்துக்குடி முதல் சென்னை வரை பல்வேறு பகுதிகளில் தினசரி இத்தகைய மழை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.