நெருங்கும் தீபாவளி…. வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை
White Board Cars Seized : தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வருகிற அக்டோர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. அதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவது மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியன்று மழை பெய்த நிலையில், அதன் பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு தீபாவளி அன்று மழை பெய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 17, 2025 அன்று வெள்ளிக்கிழமை சென்னையில் திருநெல்வேலி செல்ல ஆம்னி பேருந்துகளில் (Bus) ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல்
ரயில்களைப் பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு முன்பாகவே அனைத்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மக்கள் கடைசி நிமிடத்தில் பேருந்துகளில் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊர்களுக்கு செல்ல ஒயிட் போர்டு கார்கள் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : விடைபெற்ற தென்மேற்கு பருவமழை…. தீபாவளிக்கு மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்
வாடகைக்கு விடப்பட்ட ஒயிட் போர்டு கார்களை வாடகை கார் ஓட்டுநர்கள் பிடித்து போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விதிகளை மீறி வாடகைக்கு விடப்பட்ட கார்களை பறிமுதல் செய்துள்ளனர். சொந்த பயன்பாட்டு கார்களை வாடகைக்கு விட முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களின் கார்களை டாக்ஸி டிரைவர்கள் சிறைபிடித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபர்ப்பு ஏற்பட்டது.
ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு
தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில்களிலும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்ததால் அதில் பயணிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனைக் காரணம் காட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் 2 முதல் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. குறிப்பாக அக்டோபர் 17, 2025 வெள்ளியன்று பெரும்பாலான மக்கள் ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அன்றைய தினம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இனி 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு
குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையாக நடவடிக்கை ஏடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.