Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு

11th Public Exam Cancelled : தமிழக அரசு சார்பில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலக் கொள்கை 2025-ன் ஒரு பகுதியாகா பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மிகவும் மிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இனி 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Oct 2025 16:59 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 2017 – 2018 கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (Public Exam) நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அக்டோபர் 13, 2025 அன்று அரசானை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை 2025 என்ற திட்டத்தின் படி பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்ப்டதால் மாணவர்கள் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டியிருந்தது. இது அவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதாக இருந்தது. எனவே இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

தமிழ்நாட்டில் கடந்த 2017 – 2018 கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே இது ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை

இதனையடுத்து இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். இதுவரை 11 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030 ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை 2025

தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ், ஆங்கிலம் மட்டுமே கொண்ட இரு மொழிக் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு கல்விக்கொள்கை 2025 உருவாக்கப்பட்டது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரப்படும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5,8,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனவும் தேர்ச்சி பெறாவிட்டால் மறு தேர்வு கட்டாயம் என அறிவித்திருந்தது. ஆனால் மாநிலக் கல்விக் கொள்கையின் படி தமிழக அரசு பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!

இதனையடுத்து மாநில கல்விக்கொள்கையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டே ரத்து செய்யப்படுகிறது என்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.