புதுக்கோட்டை அரசு பள்ளியில் அவலம்: சான்றிதழ் இல்லையா? 100 தோப்புக்கரணம் போடுங்க..!

Pudukottai School Punishes Girls: புதுக்கோட்டை மாவட்டம், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ்கள் கொண்டு வராத மாணவிகள் வெயிலில் 100 முறை தோப்புக்கரணம் செய்ய வைக்கப்பட்டனர். இதனால் பல மாணவிகள் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் இந்த செயலை கண்டித்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு பள்ளியில் அவலம்: சான்றிதழ் இல்லையா? 100 தோப்புக்கரணம் போடுங்க..!

புதுக்கோட்டை அரசு பள்ளியில் அவலம்

Published: 

17 Jun 2025 11:06 AM

 IST

புதுக்கோட்டை ஜூன் 17: புதுக்கோட்டை மாவட்டம் (Pudukottai) சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (Subramaniapuram Government Girls Higher Secondary School), சான்றிதழ்கள் தராத மாணவிகள் வெயிலில் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டனர். அவர்கள் தர வேண்டிய ஆவணங்களில் ஜாதி, வருமானம், பிறப்பு சான்று உள்ளிட்டவை அடங்கும். மேலும், ஒவ்வொரு மாணவியும் ரூ.500 கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சில மாணவிகள் தோப்புக்கரணம் செய்த பிறகு உடல்நலக் குறைபாடுகளால் சிகிச்சை பெற நேர்ந்தது. பெற்றோர் இந்த தண்டனையை கண்டித்து ஆசிரியர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினர். மாணவிகள் மன உளைச்சலுடன் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சான்றிதழ் அளிக்காத மாணவிகளுக்கு தவறான தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி அரசு துறையின் கீழ் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகள் கல்வி பெறுகின்றனர். தற்போது சுமார் 900 மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சான்றிதழ்களை அளிக்காத மாணவிகள் (16.06.2025) வெயிலில் சுடு மணலில் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டனர். மேலும், இன்று (17.06.2025) சான்றிதழ் எதுவும் கொண்டு வரவில்லை என்றால் 200 முறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணமும் கோரிக்கை

இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளி திறந்ததையடுத்து, மாணவிகளிடம் ஜாதி, வருமானம், பிறப்பு, இருப்பிடம் சான்று, ஆதார், வங்கிக் கணக்கு எண் ஆகியவை மட்டுமன்றி, ஒவ்வொரு மாணவியும் ரூ.500 கொண்டுவர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளது.

வெயிலில் வாட்டிய தவிப்பு

2025 ஜூன் 17 இன்று ஆவணங்களை கொண்டு வராத மாணவிகள் வகுப்பறைக்கு அனுமதிக்கப்படாமல் வெயிலில் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டனர். இதனால், பல மாணவிகள் உடல்நலக் குறைபாடுகளை எதிர்கொண்டதோடு, சிலர் காய்ச்சலுடன் சிகிச்சை பெறும் நிலைக்கும் சென்றுள்ளனர்.

மன உளைச்சலில் மாணவிகள்

சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சான்றிதழ்கள் தராத மாணவிகள் வெயிலில் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டனர்.  பொதுமக்கள் மத்தியில் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது, மாணவிகள் மீது துன்பத்தை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கியுள்ளது. மாணவிகள் வீடு சென்று கதறி அழும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் எதிரொலி

சான்றிதழ்களை பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், மாணவிகள் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதால் பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். “இதை எதிர்த்து பள்ளிக்கே சென்று கேள்வி கேட்கப்போவதாக” அவர்கள் கூறியுள்ளனர்.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..