AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவை ஒரு நாகரிகமாகவே பாருங்கள் – ஐஐடி மாநாட்டில் சத்குரு பேச்சு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாங் பீச் நகரில் நடைபெற்ற ஐஐடி 2026 உலக மாநாட்டில், சத்குரு வழங்கிய முக்கிய உரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது. நிகழ்வில் பேசிய அவர் இந்தியாவை நாடாக அல்லாமல் ஒரு நாகரிகமாக பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ஒரு நாகரிகமாகவே பாருங்கள் – ஐஐடி மாநாட்டில் சத்குரு பேச்சு
சத்குரு
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Apr 2026 21:28 PM IST

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாங் பீச் நகரில் நடைபெற்ற ஐஐடி 2026 உலக மாநாட்டில், சத்குரு வழங்கிய முக்கிய உரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது. ஐஐடி நிறுவனங்களின் 75 ஆண்டுகள் சிறப்பை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தன் உரையில் சத்குரு, இந்தியாவை ஒரு நாடாக மட்டும் பார்க்காமல், ஒரு நாகரிகமாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் பாரம்பரியத்தை பற்றி அவர் கூறுகையில், உள்ளார்ந்த வாழ்க்கையை ஆராயும் பண்பாடு, அறிவியல் மற்றும் ஆன்மிக வளர்ச்சி இவை இரண்டும் இணைந்து இயங்கிய நாகரிகம் இந்தியா என குறிப்பிட்டார். இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், பல தலைமுறைகளில் நிகழும் மாற்றங்கள் சில ஆண்டுகளில் நடைபெறலாம். ஏஐ மற்றும் இயந்திரங்கள் மனிதர்களை விட தரவு மற்றும் நினைவாற்றலில் முன்னிலை பெறலாம் என்றாலும், மனிதர்கள் தகவல்களை சேகரிப்பதை தாண்டி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சத்குருவின் கருத்து

 

தொடர்ந்து பேசிய அவர், இந்த உலகில் மனித உடல் தான் மிகச் சிறந்த மற்றும் நுணுக்கமான தொழில்நுட்பம் ” என அவர் குறிப்பிட்டார். மனிதர்களின் உள்ளார்ந்த தெளிவு, மனநிலை சமநிலை, அறிவாற்றல் ஆகியவையே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முக்கியம் என்றார்.

ஏப்ரல் 22 முதல் 25 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பம் ஆரோக்கியம், உலக முதலீடு ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த மாநாடு தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுமல்லாமல், மனிதர்களின் விழிப்புணர்வு மற்றும் சமநிலையையும் முக்கியமாக எடுத்துக் காட்டியது.

Follow Us