பெண்களுக்கான உதவித் தொகை ரூ.2500-ஆக உயர்வு…அரசாணை வெளியீடு…முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு!
Women Entitlement Amount Increase: புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1000-த்தில் இருந்து ரூ.2500- ஆக உயர்த்தி வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சுமார் 1.30 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, புதுச்சேரியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில், பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ 2.500 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல, முதியோர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.500 அதிகரித்தல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், அரசு உதவி பெறாத பெண்களுக்கு ரூ. 2, 500 உரிமைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு பின்பு வழங்குவதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 உதவித் தொகை
மேலும், புதுவை மாநிலத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ஜனவரி மாத கடைசிக்குள் உயர்த்தி வழங்கப்படும். இதே போல, பொங்கல் பண்டிகை காண ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து – பரபரப்பு தகவல்




புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு சலுகைகள்
முன்பு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து செயல்படுத்தும். அப்போது, தமிழகத்தில் பெரிய அளவில் சலுகைகள் செயல்படுத்தப்படாது. இதனால், தமிழக மக்கள், புதுச்சேரி மக்களை ஒரு வித ஏக்கத்தோடு பார்க்கும் நிலை இருந்து வந்தது. ஆனால், ஜி. எஸ். டி. வரி விதித்த பிறகு, புதுச்சேரியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.
புதுச்சேரியிலும் மாதாந்திர உதவித் தொகை
இதனால், தற்போது புதுச்சேரி மக்கள், தமிழக மக்களை ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தை பின்பற்றியே புதுச்சேரி அரசும் செயல்பட்டு வரும் நிலை உள்ளது. அதன்படியே, கடந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, மகளிருக்கு ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு உதவித் தொகை
இதை பின் தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். தற்போது, அந்த மாதாந்திர உதவித் தொகை ரூ.2,500- ஆக உயர்த்தி வழங்க உள்ளதாக முதல்வர் என் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!