Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் விழுந்த மினிபஸ் – 20 பேர் பலத்த காயம்… 3 பேர் நிலைமை கவலைக்கிடம்

ஊட்டி அருகே மினிபஸ் ஒன்று 120 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் விழுந்த மினிபஸ் – 20 பேர் பலத்த காயம்… 3 பேர் நிலைமை கவலைக்கிடம்
120 அடி பள்ளத்தில் மினி பஸ் கவிழ்ந்து கோர விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Jan 2026 16:23 PM IST

நீலகிரி, ஜனவரி 7: ஊட்டி அருகே மினிபஸ் ஒன்று 120 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை கல்லக்கொரை ஹடா அருகே பயணிகளுடன் சென்ற மினி பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி ஆழத்தில் கவிழந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 

120 அடி பள்ளத்தில் மினி பஸ் கவிழந்து கோர விபத்து

உதகையில் இருந்து ஜனவரி 7, 2026 அன்று மதியம் தங்காடு என்ற கிராமத்தை நோக்கி 20 பயணிகளுடன் சென்ற மினிபஸ் கல்லக்கொரை ஹோடா பகுதியின் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்து, 120 அடி உயர பள்ளத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் விபத்து குறித்து காவல்துறைக்கும் ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் மக்களும் பேருந்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்களை மீட்டு உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 3 பேருக்கு பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.