AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து – வெளியான தகவல்

CM Joseph Vijay : புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதது குறிப்பிடத்தக்கது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து – வெளியான தகவல்
பிரதமர் மோடி - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 May 2026 21:52 PM IST

சென்னை, மே 10 : பிரதமர் மோடி நேரடியாக தொலைபேசி வாயிலாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே 10, 2026 அன்று 13வது முதல்வராக  பொறுப்பேற்றார்.  அவருக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு பிற கட்சிகளின் ஆதரவுடன் சி. ஜோசப் தமிழக முதல்வராகிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்த நிலையில் புதிதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தொலைபேசி வாயிலாக தொடர்புக கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தகவல் தமிழக அரசியலில்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக விஜய்யின் பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் மன்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய்

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பிரதமரின் பதிவு

 

முன்னதாக தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றவுடன் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது பதிவில், தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு பதிலளித்த தமிழக முதல்வர் விஜய்,  முதல்வராக நான் பொறுப்பேற்றதையொட்டி, எனக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, ஒன்றிய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற கருப்பையா – யார் இவர் ?

தேர்தலுக்கு பிறகு தமிழக சட்டமன்றம் மே 10, 2026 நாளை நடைபெறவிருக்கிறது. இதில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எம்எல்ஏகளாக பொறுப்பேற்கவிருக்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவியேற்பு செய்து வைக்கிறார். மேலும், மே 13, 2026க்குள் முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us