“உடையும் திமுக?.. எம்எல்ஏ-க்கள் பலர் ராஜினாமா செய்ய வாய்ப்பு?”.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்!
இந்த சுயநல கூட்டு முயற்சியின் வெளிப்பாடு காரணமாகவே தற்போது இருக்கும் கூட்டணிகளில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறத் தொடங்கியுள்ளன. தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பிற கட்சிகளை உடைக்கும் வேலைகளிலும், பணத்தைக் கொடுத்து மற்ற கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளதாக சாடினார்.
மதுரை, ஜுன் 29: தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் புதிய அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க திரைமறைவில் தீவிர முயற்சி செய்து வருவதாக தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுரை மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபற்றிய முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் – அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்
திமுக – அதிமுக திரைமறைவு கூட்டணி முயற்சி:
தமிழக மக்கள் பெரும்பான்மையாகத் தமிழக முதல்வராக அண்ணன் விஜயை தேர்ந்தெடுத்து வாக்களித்துள்ளனர். ஆனால், மக்களின் இந்த தீர்ப்பை எதிர்த்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக-வும் அதிமுக-வும் கைகோர்த்துச் செயல்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் ஒருபுறமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மறுபுறமும் இணைந்து இதற்காகத் தனி டீம் அமைத்து ஒவ்வொரு நாளும் பேசி வருகிறார்கள். இன்று காலை வரை கூட இந்த குதிரை பேர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
கூட்டணிகளை உடைக்கும் சதி மற்றும் மிரட்டல்:
இந்த சுயநல கூட்டு முயற்சியின் வெளிப்பாடு காரணமாகவே தற்போது இருக்கும் கூட்டணிகளில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறத் தொடங்கியுள்ளன. தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பிற கட்சிகளை உடைக்கும் வேலைகளிலும், பணத்தைக் கொடுத்து மற்ற கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். மிரட்டல் அரசியலின் காரணமாகவே தற்போது கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
திமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு?
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயலும் இந்த நடவடிக்கைக்குத் திமுக-வில் உள்ள பல எம்.எல்.ஏ-க்களுக்கே உடன்பாடு இல்லை என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. நாளைக்குத் தொகுதிப் பக்கம் போனால் மக்களை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு சுயநல முடிவை எடுத்தால் மக்களிடம் பதில் சொல்ல முடியாது என்பதால், திமுக-வைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்
சொத்தை பாதுகாக்கவே இந்த நாடகம்:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு குடும்பத்தினரும் தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் ஊழல்களை மூடி மறைக்கவும் மட்டுமே இந்த சுயநலமான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் நிர்மல்குமார் தனது பேட்டியில் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.