AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையின்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்து உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் கொண்டம்பாளையத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பதும் அவர் அதிமுக தொண்டர் என்பதும் தெரியவந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஒருவர் பலி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Nov 2025 21:19 PM IST

கோபிசெட்டிபாளையம், நவம்பர் 30 : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.  செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அவர் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலைில் அதற்கேற்ப தனது உரையில் எடப்பாடி பழனிசாமி, ஓட்டு கேட்டு வந்தார், பதவியை ராஜினமா செய்ய உங்களிடம் கேட்டாரா என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இந்த பரப்புரையில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விசாரணையில் அவர் கொண்டம்பாளையத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையில் ஒருவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஈரோடு மாவட்டம் கொண்டம்பாளையத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பதும் அவர் அதிமுக தொண்டர் என்பதும் தெரிய வந்துள்ளது.  அதிமுக கூட்டத்தில் தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்தில் அதிமுக கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பொதுக்கூட்டங்களில் தொடர் மரணங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என கூறப்படுகிறது.

கோபிசெட்டிபாளையம் கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவு

 

கோபி செட்டிபாளையத்தில் நடந்த கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியே குலுங்கும் அளவிற்கு, எழுச்சிப் பயணக் கூட்டத்திற்கு செல்லும் வழியெங்கும் மக்கள் எழுச்சியுற பெருந்திரளாக வந்து வாஞ்சையோடு வரவேற்றனர். இந்த எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட ஒருவன் அல்ல. நான் எப்போதும் 2 கோடி அஇஅதிமுக தொண்டரில் ஒருவனாகவே இருக்கிறேன். எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்! 2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us