AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை.. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Karaikal Local Holiday : காரைக்கால் மாவட்டத்திற்கு 2025 ஜூன் 5,6ஆம் தேதி தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருநள்ளாறு தேரோட்டத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளி விடுமுறை என்பதால், மாணவர்களுக்கு சனி, ஞாயிறுடன் தொடர் 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை.. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
காரைக்கால் உள்ளூர் விடுமுறைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jun 2025 16:46 PM IST

காரைக்கால், ஜூன் 05 : புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் (Karaikal Local Holiday) தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 5ஆம் தேதியான இன்றும், ஜூன் 6ஆம் தேதியான நாளையும் காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் போன்ற முக்கிய விசேஷ தினங்களில்  சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை

இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில், எதாவது ஒரு வாரத்தில் சனிக்கிழமை வேலை நாட்களாகவும் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 2025 ஜூன் 5,6ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் திருநள்ளாறு தேர்ரோட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி, 2025 ஜூன் 5,6ஆம் தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் விடுமுறை என்பதால், அடுத்து வரும் சனி, ஞாயிறு விடுமுறையோடு, மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பள்ளி திறந்த நான்கு நாட்களிலேயே, மாணவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக, 2025 ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்றது கைலாசநாதர் கோயில். இந்த கோயிலில் 2025 ஜூன் 5ஆம் தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை யொட்டி, பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வருகை தருவார்கள். மேலும், கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2025 ஜூன் 6ஆம் தேதி திருநள்ளாறு தேரோட்டமூம் நடைபெறுகிறது. திருநள்ளாறு சனீஸ்வர கோயிலில் தேர் திருவிழா 2025 ஜூன் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

Follow Us