AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கயிறு கட்டக்கூடாது.. கலர் பொட்டுக்கு தடை.. மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு!

Tirunelveli CEO Advise to Students : பள்ளிகளில் சாதிய மோதல்கள் ஏற்படும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது, சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கயிறு கட்டக்கூடாது..  கலர் பொட்டுக்கு தடை.. மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு!
மாணவர்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Jun 2025 07:00 AM IST

திருநெல்வேலி, ஜூன் 05 : கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Tirunelveli CEO) மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். மாணவர்கள் சாதி அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு, 2025 ஜூன் 2ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி பிரச்னைகள் சமீப காலங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் பள்ளிக்கும் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில், மாணவர்களுக்கு இடையேயான பிரச்னையில், சக மாணவர்களை அரிவாளால் தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படியான சூழலில், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மாணவர்களுக்கு கட்டுப்பாடு

இந்து செய்தி தகவலின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில், அனைத்து மாணவர்களும் கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையை அணிய வேண்டும். பள்ளிக்கு வரும்போது இறுக்கமான மூன்று-க்கு நான்கு பேன்ட் மற்றும் இறுக்கமான சட்டைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக முடி வைக்கக் கூடாது. தலைமுடியை ஸ்மார்ட் கட்டிங் செய்து பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு சாதியை வெளிப்படுத்தும் விரமாக உள்ளாடைகள் அணிந்து வரக் கூடாது. மேலும், மிதிவண்டிகளில் சாதியை காட்டும் ஸ்டிக்கர்கள் ஆகிய ஓட்டக் கூடாது.

கலர் கலராக பொட்டு வைத்து வருவது, வண்ணக் கயிறுகளை கை, கழுத்தில் கட்டுவது கூடாது. மாணவிகள் நெற்றியில் கலர் பொட்டு வைக்க கூடாது. மாணவிகள் வண்ண ரிப்பன்களை தவிர்க்க வேண்டும். மாணவிகள் எப்போதும் பரிந்துரைக்கப்பட்டபடி ஓவர் கோட்டுகளை அணிய வேண்டும்.

பெற்றோர்களுக்கு அறிவிப்பு

மாணவர்கள் கத்தி, கத்தி போன்ற கொடிய ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. தினமும் ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளை சோதனையிட வேண்டும். பள்ளிக் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் அனைத்து மாணவர்களும் தனிப்பட்ட சுகாதார உறுதிமொழியை எடுக்க வேண்டும்.

பெண் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு நாப்கின்களைப் பயன்படுத்துவது, அவற்றை அப்புறப்படுத்துவது மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள் வகுப்பு ஆசிரியர்களை சந்திக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் முன் அனுமதி பெற்ற பின்னரே மாணவர்கள் விடுப்பு எடுக்க வேண்டும். ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் விடுப்பு எடுத்தால், பெற்றோருடன் தலைமை ஆசிரியரை சந்தித்த பிறகே, வகுப்பிற்கு செல்ல வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் திருநெல்வேலியில் மாணவர்களிடையே சாதிய மோதல் இருந்து வரும் நிலையில், இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow Us