AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவிலேயே முதன்முறை.. தமிழகத்தில் டெங்கு தடுப்பூசித் திட்டம் தொடக்கம்.. 3 மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள்!!

India’s First Dengue Vaccination Drive Begins: இந்தியாவிலேயே முதன்முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முன்னோடி அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் 'கியூடெங்கா' தடுப்பூசி 80% பாதுகாப்பை அளிக்கும் என்றும், இதன் முடிவுகள் தேசிய அளவிலான வழிகாட்டியாக அமையும் என்றும் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறை.. தமிழகத்தில் டெங்கு தடுப்பூசித் திட்டம் தொடக்கம்.. 3 மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள்!!
டெங்கு தடுப்பூசி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Oct 2026 10:05 AM IST

அக்டோபர், 19: டெங்கு காய்ச்சல் பாதிப்பு உலகளவில் பெரும் பொதுசுகாதார சவாலாக உருவெடுத்து வரும் நிலையில், கொசுக்களால் பரவும் இந்த ஆபத்தான நோயைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏடீஸ் (Ads) வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான இந்தியாவின் முதலாவது தடுப்பூசி திட்டம், தமிழகத்தில் சோதனை முறையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் பதிவாகும் பகுதியாகக் கண்டறியப்பட்ட கடையநல்லூரில், இந்த முன்னோடித் திட்டத்தைச் சனிக்கிழமையன்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இது இந்தியாவிலேயே டெங்கு நோய்க்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் தடுப்பூசி நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்”.. ஊழலற்ற நிர்வாகமே எங்கள் இலக்கு.. அண்ணாமலை!!

ஐ.சி.எம்.ஆர். அறிவியலாளர்களின் ஆய்வும்:

திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், இந்தத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் மூன்று மாத இடைவெளியில் செலுத்தப்படும் என்றும், இது டெங்கு காய்ச்சலுக்கு எதிராக 80 சதவீதம் வரை நோய் எதிர்ப்புப் பாதுகாப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘டேக்டா’ (Takeda) மருந்து உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கியூடெங்கா’ (Qdenga) என்ற இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் கடையநல்லூரில் ஆய்வு செய்த பிறகே நாட்டின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றார். இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் (ICMR) சேர்ந்த இரண்டு முன்னணி விஞ்ஞானிகள் கடையநல்லூரில் தடுப்பூசியின் தாக்கத்தை நேரடியாக ஆய்வு செய்யவுள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் டெங்கு நோயாளிகளின் உயிர் பிரியும் அபாயம் உள்ள சூழலில், இந்தியாவில் இதுவரை இந்நோய்க்குத் தடுப்பூசி பயன்பாட்டில் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

சர்வதேச அங்கீகாரமும் மத்திய அரசின் ஒப்புதலும்:

நான்கு வகையான டெங்கு காய்ச்சல் வைரஸ்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்தத் தடுப்பூசிக்கு உலகளவில் பிரேசில் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் தகுதிச்சான்றிழையும் பெற்ற இத்தடுப்பூசியைப் பிரேசில் நாடு தனது பொது சுகாதாரத் தடுப்பூசி அட்டவணையில் இணைத்துள்ளது. இந்தியாவில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு , 4 வயது முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு இத்தடுப்பூசியைச் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் உள்ள வேறு எந்தவொரு மாநிலமும் இதுவரை இத்தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்காத நிலையில், தமிழக அரசு முதன்முதலாக இதன் தாக்கத்தைக் கள அளவில் முன்னோடி அடிப்படையில் ஆய்வு செய்ய முன்வந்துள்ளது.

இதையும் படிக்க: SIR விவகாரம்: “டெல்லியில் மட்டும் பேசிவிட்டு தமிழகத்தில் பேச தயங்குவது ஏன்?”.. காங்கிரசுக்கு கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி!!

மாநில அளவிலான விரிவாக்கத் திட்டம்:

கடையநல்லூரில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவான கள ஆய்வின் முடிவுகள் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். சிறப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் கடையநல்லூரில் இத்தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி, அரசிடம் ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் டெங்கு தடுப்பூசி திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.

Follow Us