நாளை இந்த 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Heavy Rain Alert : தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக மே 24, 2026 இன்றும், மே 25, 2026 நாளையும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, மே 24 : தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக மே 24, 2026 இன்றும், மே 25, 2026 நாளையும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பலத்த காற்றும் வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நாளை இந்த 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மே 25, 2026 திங்கள்கிழமை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க : மீண்டும் எகிறியது சுங்க கட்டணம்.. அதிர்ச்சியில் தமிழக வாகன ஓட்டிகள்.. எவ்வளவு உயர்வு தெரியுமா?




குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதே போல, வருகிற மே 26, 2026 செவ்வாய் கிழமை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிது. அதே போல, மே 25, 2026 நாளை முதல் மே 27,2026 புதன் கிழமை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்”.. தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு
சென்னையை பொறுத்தவரை மே 25, 2026 நாளை வானம் மேகத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.