AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“சிங்கப்பெண் படைக்கு துப்பாக்கி”.. நாள்தோறும் 2 ஷிப்ட் முறையில் ரோந்துப் பணி!!

இந்தச் சிறப்புப் படைக்காகத் தனி போலீஸ் கட்டுப்பாட்டு அறை விரைவில் தொடங்கப்பட உள்ளது. உதவி தேவைப்படும் பெண்கள் 100, 112 மற்றும் 1091 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்களுக்கு வரும் அழைப்புகள் உடனடியாக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டு, அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

“சிங்கப்பெண் படைக்கு துப்பாக்கி”.. நாள்தோறும் 2 ஷிப்ட் முறையில் ரோந்துப் பணி!!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Jun 2026 10:34 AM IST

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தமிழகக் காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ நேற்று முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகத் தனது பணியைத் தொடங்கியுள்ளது. பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு முன்கூட்டியே கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி குற்றங்களைத் தடுப்பதே இப்படையின் முதன்மை நோக்கமாகும்.

இதையும் படிக்க : சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்? ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு!

2 ஷிப்ட் முறையில் ரோந்துப் பணி:

இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ நாள்தோறும் 2 ஷிப்ட் முறையில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளது. பயிற்சி பெற்ற பெண் போலீசாரைக் கொண்ட இக்குழுவினர், பொது இடங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பெண்கள் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் பிரத்யேக ரோந்து வாகனங்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை மிகத் துரிதமாகக் கையாள்வதும், ஆபத்து மற்றும் அவசரக் காலங்களில் மிக விரைவாகச் செயல்பட்டு அவர்களைப் பாதுகாப்பதும்தான் இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யின் முதன்மையான நோக்கமாகும். ‘பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழகம்’ என்ற நிலையை முழுமையாக உருவாக்குவதே இலக்கு.

24 மணி நேரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணி:

பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் இதர பொது இடங்களில் இந்த அதிரடிப்படை போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

முன்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கெல்லாம் நடந்துள்ளன, அல்லது இனிமேல் எங்கு நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் சேகரிக்கப்படும். அந்தப் பகுதிகளில் இந்த சிறப்புப் படை கூடுதல் கவனம் செலுத்தி, பெண்களுக்கு எதிரான எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தனி கட்டுப்பாட்டு அறை மற்றும் அவசர எண்கள்:

இந்தச் சிறப்புப் படைக்காகத் தனி போலீஸ் கட்டுப்பாட்டு அறை விரைவில் தொடங்கப்பட உள்ளது. உதவி தேவைப்படும் பெண்கள் 100, 112 மற்றும் 1091 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்களுக்கு வரும் அழைப்புகள் உடனடியாக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டு, அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

பணிகளின் வரம்புகள் மற்றும் நவீன உபகரணங்கள்:

இந்தச் சிறப்புப் படைக்குத் தனியாக வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் கிடையாது. குற்றங்கள் நடக்காமல் தடுப்பதும், பெண்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்வதுமே இவர்களின் முதன்மைப் பணியாகும். இப்படையில் உள்ள பெண் காவலர்களுக்குத் தற்காப்பு, எதிர்த்தாக்குதல் மற்றும் துப்பாக்கிகளைக் கையாள்வதற்கான உயர்தர சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் இவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்படாது என்றாலும், அவசரத் தேவை மற்றும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டால் துப்பாக்கிகள் வழங்கப்படும். இவர்களுக்குப் பாதுகாப்பைத் தவிர வேறு எந்தப் பணிகளும் வழங்கப்பட மாட்டாது.

இதையும் படிக்க : “சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!

தொழில்நுட்பக் கண்காணிப்பு:

பாதுகாப்புப் பணிகளை நவீனப்படுத்த இப்படைக்குத் தேவையான 49 அதிநவீன டிரோன் கேமராக்கள் விரைவில் வாங்கப்பட உள்ளன. மேலும், பெண் காவலர்களின் பாதுகாப்பிற்காக உடல் கேமரா பொருத்தப்பட்ட பிரத்யேக நவீன சீருடைகளும் விரைவில் வழங்கப்படும். தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us