AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்விச்சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவா்கள்.. எங்கு தெரியுமா? அமைச்சர் சொன்ன தகவல்

Keezhadi Archaeological Site Trip: தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கீழடி உள்ளிட்ட தொல்லியல் தளங்களுக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனர். 'கலைச் சிற்பி' திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 மாணவர்களுக்கு கல்லூரி கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரிப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்விச்சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவா்கள்.. எங்கு தெரியுமா? அமைச்சர் சொன்ன தகவல்
கீழடி Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 22 Jun 2025 10:04 AM IST

சென்னை ஜூன் 22: அரசுப் பள்ளி மாணவா்கள் (Government School Student) விரைவில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்விடங்களுக்கு (To archaeological sites including Keezhadi) கல்விச் சுற்றுலாவாக அழைக்கப்படுவா் என அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) தெரிவித்துள்ளாா். ‘கலைச் சிற்பி’ திட்டத்தின் கீழ் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு ரூ.70 லட்சம் செலவில் 6 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரிக் கல்வியைப் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்த, பிளஸ்-1 மாணவா்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதுவரை 1 லட்சம் மாணவா்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனா். ஆண்டுதோறும் 1,000 ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவா்களுக்கு வரலாற்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்குடன் கீழடி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அரசுப்பள்ளி மாணவா்கள் கீழடிக்கு கல்விச் சுற்றுலா

தமிழக அரசுப்பள்ளி மாணவா்கள் விரைவில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்விடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவா்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது மாணவா்களின் வரலாற்று மற்றும் கலாச்சார அறிவை மேம்படுத்தும் விதமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

‘கலைச் சிற்பி’ பயிலரங்கில் பரிசளிப்பு நிகழ்வு

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான ‘கலைச் சிற்பி’ பயிலரங்கில் சிறந்த கலைத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் அமைச்சர். ஓவியம், சிற்பம், பாரம்பரிய நடனங்கள், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் மாணவா்கள் திறமையை வெளிப்படுத்தினா்.

கலைச்சிற்பி சிறப்பு பயிலரங்கம்

கல்வி விழிப்புணர்விற்கான களப்பயணம்

மாணவா்களுக்கு கல்லூரி கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரசு களப்பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிளஸ்-1 மாணவா்களை நேரடியாக கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், கல்வியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் மாணவா்களிடம் உருவாகிறது.

தொல்லியல் பயிற்சியும் திட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் 1,000 ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் பள்ளிகளில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்த அறிவை மாணவா்களுக்கு வழங்குகின்றனா். இதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவா்கள் கீழடி உள்ளிட்ட முக்கிய தொல்லியல் ஆய்விடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலா் பி. சந்தரமோகன், இயக்குநா்கள் ச. கண்ணப்பன், பூ. ஆ. நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கீழடி

கீழடி என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் ஆய்விடம். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்ககால தமிழரின் நாகரிக வாழ்க்கை, கல்வி, வணிகம், கலாச்சாரம் போன்றவை தொடர்பான பல ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, கம்மிய வேலைப்பாடுகள், செம்மண் பாண்டங்கள், எழுத்துக்கள் உடைய ஓலைச்சுவடிகள் போன்றவை கிடைத்துள்ளன. கீழடி, தமிழ் மொழியின் வரலாற்றை 2,500 ஆண்டுகளுக்கு மேல் கொண்டுபோகும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

Follow Us