Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருபவாரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு இதோ!

Madurai Murugan Conference 2025: 2025 ஜூன் 22 அன்று மதுரையில் நடைபெறும் பெருந்திரளான முருக பக்தர் மாநாட்டிற்காக, சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருபவாரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு இதோ!
முருக பக்தர்கள் மாநாட்டிற்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 18 Jun 2025 08:41 AM

மதுரை ஜூன் 18: மதுரையில் (Madurai)  2025 ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக (Muruga devotees’ conference) சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் (Special train from Chennai to Nellai) இயக்கப்படுகிறது. மாநாட்டில் யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அறுபடை வீடுகளை ஒருங்கிணைக்கக் கோரி மாநாடு நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றனர். போக்குவரத்து கட்டுப்பாட்டுக்காக வாகனங்களுக்கு வண்ண அடிப்படையில் அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன. மாநகர போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

மதுரை முருகன் மாநாடு மற்றும் ரயில் சேவை

மதுரையில் 2025 ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை 2025 ஜூன் 21ஆம் தேதி எழும்பூரில் இருந்து புறப்படும். மறுநாள் மாநாட்டிற்குப் பிறகு, 2025 ஜூன் 22ஆம் தேதி நெல்லையிலிருந்து சென்னைக்கு திரும்பும் சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கிருத்திகை நட்சத்திர தின சிறப்பு

தமிழ் கடவுள் முருகனுக்கான விசேஷமான கிருத்திகை நாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விருப்பப்படி விரதம் இருந்து வேண்டினால் நல்லதே நிகழும் என ஐதீகம் கூறுகிறது. இந்த நாளுக்காகவே மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் சேவை

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோரும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் ஆன்மீக ஆர்வம் கொண்டவர் என்பதால் அவர் பங்கேற்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

அறுபடை வீடுகள் & பக்தர்களின் எதிர்பார்ப்பு

மாநாட்டின் முக்கிய நோக்கம், அறுபடை வீடுகள் எனப்படும் முருகன் கோயில்களை பராமரிப்பது மற்றும் பக்தர்களை ஒருங்கிணைப்பதாகும். திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோயில்களை இணைக்கும் வகையில் மேலும் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வாகன அனுமதி சீட்டு விதிகள்

மதுரையில் 2025 ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பின் மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பங்கேற்கும் பக்தர்கள், தங்களது வாகனங்களுக்கு அனுமதி பெற மாவட்ட டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன அனுமதிக்காக, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ் பெறுவது கட்டாயமாகும்.

போலீசாரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டிற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டா எனவும், சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை ஐகோர்ட்டின் நிபந்தனைகள் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், அதே வழியாகத்தான் திரும்பவும் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.