AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pratyangira Devi: தீய சக்திகள் விலகும்.. நன்மைகள் அருளும் ப்ரத்யங்கரா தேவி வழிபாடு!

பிரத்யங்கிரா தேவி, சிங்க முகம் கொண்ட சக்திவாய்ந்த பெண் தெய்வமாக வழிபடப்படுகிறார். நரசிம்மரின் கோபத்தை அடக்க அவர் தோன்றினார் எனவும், பிரபஞ்ச சமநிலைக்காகவும் அவதரித்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. தீய சக்திகள், மனநலப் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுவார் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

Pratyangira Devi: தீய சக்திகள் விலகும்.. நன்மைகள் அருளும் ப்ரத்யங்கரா தேவி வழிபாடு!
ப்ரத்யங்கரா தேவி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Jun 2025 14:11 PM IST

இந்து மதத்தைப் (Hindu Religion) பொறுத்தவரை ஏராளமான ஆண், பெண் தெய்வங்கள் உள்ளது. இவைகளில் சாந்த சொரூபினி அழைக்கப்படும் கடவுள்களும், ஆக்ரோஷமான தோற்றங்களை வெளிப்படும் தெய்வங்களும் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.  அந்த வகையில் உக்கிரத்துடன் காணப்படும் பெண் தெய்வங்களில் முதன்மையானவர் காளி. அதேவகையில் பார்வதியின் வடிவமாக காட்சி தரும் ப்ரத்யங்கரா தேவியும் (Pratyangira Devi) ஒருவர். எப்படி நரசிம்மர் உருவம் உள்ளதோ, அதேபோல் சிங்க முகம், பெண் உடல் கொண்டு அவர் காட்சியளிக்கிறார். நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதம், 18 கைகளிலும் ஆயுதங்கள், ஆக்ரோஷமாக பார்வை கொண்டு ப்ரத்யங்கரா தேவி காட்சிக் கொடுக்கிறார். வாழ்க்கையில் எதிர்மறை சக்திகளை அகற்றவும், தீமையில் இருந்து நம்மை பாதுகாக்கவும் இந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவர்

ப்ரத்யங்கரா தேவிக்கு பெண் நரசிம்மி, அதர்வண பத்ரகாளி, நிகும்பலா என்ற வேறு சில பெயர்களும் உள்ளது. அவரின் உருவம் வலிமை மற்றும் தைரியத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ப்ரத்யங்கரா தேவியின் தோற்றம் இந்து வேதங்களுடன் இணைக்கப்பட்டு சொல்லப்படுகிறது. அதாவது பிரபஞ்சம் உருவாகும் போது நன்மை மற்றும் தீமைகளின் சக்திகளை சமநிலைப்படுத்துவதற்காக அவள் தோன்றியதாக மார்க்கண்டேய புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சிவன் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணிலிருந்து உருவாகும் நெருப்பு சக்தியிலிருந்து ப்ரத்யங்கரா தேவியை படைத்ததாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அந்த தெய்வத்தை பற்றி ஒரு முக்கிய புராண கதையும் சொல்லப்படுகிறது. அதாவது நரசிம்மா சுவாமியின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக ப்ரத்யங்கரா தேவி சிங்க முகம் மற்றும் பெண்ணுடன் அம்சமாக தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தேவியை வழிபடும்போது பூஜை அறையில் சிவப்பு நிற பூக்கள் எலுமிச்சை மற்றும் கடுகு எண்ணெயால் விளக்கேற்றுவது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ப்ரத்யங்கரா தேவி ஜெயந்தி ஒரு முக்கிய பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பிரத்தியங்கிரா தேவிக்கு அமைந்துள்ள கோயிலும் உள்ளது. இந்த கோயிலானது செங்கல்பட்டு – சென்னை இடையே அமைந்திருக்கும் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ளது.

தீய சக்திகளிடம் இருந்து காப்பவர்

ப்ரத்யங்கரா தேவியை வழிபட்டால் மனநலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் இடம் இருந்தும் அவள் நம்மை காப்பால் என்பது பக்தர்களின் தீராத ஐதீகமாக உள்ளது. மேலும் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் தாண்டி நீங்கள் வெற்றியை பெற ப்ரத்யங்கரா தேவியின் ஆசி துணை நிற்கும் என கருதப்படுகிறது. இந்த அம்மனை ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us