பிரபல வங்கியின் லாக்கரில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மாயம்…மூத்த வங்கி அதிகாரி விசாரணை!
Faridabad Sbi Bank Gold Missing: ஹரியானா மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள லாக்கரில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை மாயமாகி இருந்தது. இது தொடர்பாக அதன் உரிமையாளர் அளித்த புகாரில் வங்கியின் மூத்த அதிகாரி விசாரணை மேற்கொள்கிறார்.
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் செக்டார் 15-இல் ஒரு பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உள்ள ஒரு லாக்கரில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மர்மமான முறையில் மாயமாகி இருந்தன. இந்த லாக்கரை 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அதன் உரிமையாளரான பட்டய கணக்காளர் டிசி கார்க்கின் மனைவி வங்கிக்கு சென்று பார்த்தபோது, அந்த லாக்கரில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அதன்பின்னர், இந்த லாக்கரில் உள்ள தங்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, வங்கி ஊழியர்கள் கூறுகையில், தங்கள் பெயரில் அத்தகைய லாக்கர் இல்லை என்றும், ஒரு ஆண்டுக்கு முன்பு அது வேறொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினர். இருப்பினும், வங்கியில் டிசி கார்கின் கணக்கில் இருந்து ஆண்டு வாடகை ரூ.2,360- ஐ கழித்து, கார்க் அசல் லாக்கர் சாவியை காட்டிய போது வங்கி அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
லாக்கரில் இருந்த 1.25 கிலோ தங்கம்-3 கிலோ வெள்ளி மாயம்
வங்கியில் உள்ள அந்த லாக்கர் திறக்கப்பட்டு, தனது 1.25 கிலோ தங்க கட்டிகள் மற்றும் 3 கிலோ வெள்ளி திருடப்பட்டதாகவும், அதற்கு முன்பு அதற்கான சாவியை பயன்படுத்தி லாக்கர் புதிய வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கார்க் குற்றம் சாட்டினார். ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் லாக்கரை நாங்களாகவே காலி செய்து விட்டதாக வங்கி கூறினாலும், வாடகை ஏன் இன்னும் வசூலிக்கப்படுகிறது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
மேலும் படிக்க: திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை.. காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி!




வங்கியின் மூத்த அதிகாரிகள் விசாரணை
மேலும், கடந்த 2014- ஆம் ஆண்டு டிசி கார்க் லாக்கரை வாடகைக்கு எடுத்ததாகவும், தனது கணக்கிலிருந்து ஆண்டுக்கு ரூ.2,360 கட்டணம் வழக்கமாகக் கழிக்கப்படுவதாகவும் கூறினார். தற்போது லாக்கர் வைத்திருப்பவராகக் காட்டப்பட்டுள்ள நபரிடம் வங்கி தனது லாக்கரின் நகல் சாவியை ஒப்படைத்ததாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து காவல்துறையில் முறையான புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், தலைமை அலுவலகத்தை சேர்ந்த மூத்த எஸ் பி ஐ அதிகாரிகள் தற்போது இந்த தங்கத்திற்கு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாக்கர் வேறொருவருக்கு ஒதுக்கீடு
இது தொடர்பாக கார்க் கூறுகையில், அவர் முன்னதாகவே லாக்கரை ஒப்படைத்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதை மறுத்தனர். வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் லாக்கர் உடைக்கப்பட்டு விகாஸ் சவுகான் என்பவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டதாகவும், நகல் சாவி வழங்கப்பட்டதாகவும் கார்க் குற்றம் சாட்டினார். லாக்கர் எப்போது உடைக்கப்பட்டது அல்லது எப்போது விலைமதிப்பற்ற பொருட்கள் காணாமல் போனது என்பது தனக்குத் தெரியாது என்று கார்க் கூறினார்.
மேலும் படிக்க: சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியையை.. பள்ளிக்குள் விட மறுத்த காவலாளி.. பாய்ந்தது வழக்கு!!