AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளிநாடு செல்ல முடியாததால் விரக்தி.. நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி இளைஞர் தற்கொலை.. சென்னையில் ஷாக்!!

லண்டன் சென்று தனது மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. தனது லண்டன் படிப்பு செலவிற்காகத் தாயிடம் ஜோதிமணி பணம் கேட்டுள்ளார். ஆனால், வசந்தா தன்னிடம் போதுமான பணவசதி இல்லை என்று கூறியுள்ளார். விடாப்பிடியாக இருந்த ஜோதிமணி, தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றாவது தனக்குப் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

வெளிநாடு செல்ல முடியாததால் விரக்தி.. நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி இளைஞர் தற்கொலை.. சென்னையில் ஷாக்!!
மாதிரிப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 May 2026 08:30 AM IST

சென்னையில் வெளிநாடு சென்று கல்வி பயில வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாத விரக்தியில், பட்டதாரி இளைஞர் ஒருவர் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கவரை தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (67). இவரது கணவர் ரவிசங்கர், சென்னை மாநகர காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2017-ஆம் ஆண்டு ரவிசங்கர் உடல்நலக் குறைவால் காலமானார். வசந்தா தனது 29 வயது மகன் ஜோதிமணியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஜோதிமணி கல்வியில் சிறந்து விளங்கிய பட்டதாரி ஆவார். அவர் கடந்த 2024-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (M.Sc) மேற்படிப்பில் சேர்ந்தார். ஓராண்டு கல்வி பயின்ற நிலையில், சில காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் சென்னைக்குத் திரும்பினார். ஓராண்டு காலமாக வீட்டிலேயே இருந்த ஜோதிமணிக்கு, மீண்டும் லண்டன் சென்று தனது மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது.

பொருளாதார நெருக்கடியால் தாய் மறுப்பு:

தனது லண்டன் படிப்பு செலவிற்காகத் தாயிடம் ஜோதிமணி பணம் கேட்டுள்ளார். ஆனால், வசந்தா தன்னிடம் போதுமான பணவசதி இல்லை என்று கூறியுள்ளார். விடாப்பிடியாக இருந்த ஜோதிமணி, தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றாவது தனக்குப் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார். கணவர் இல்லாத நிலையில், வசித்து வரும் வீட்டையும் விற்றுவிட்டால் வாழ்வதற்கு இடமில்லாமல் போகும் என்ற அச்சத்தில், வீட்டை விற்க வசந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். லண்டன் சென்று படிக்க வேண்டும் என்ற தனது லட்சியத்திற்குப் பணம் கிடைக்காதது ஜோதிமணிக்கு மிகுந்த விரக்தியை அளித்தது. இந்த மன உளைச்சலின் உச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார்.

திட்டமிட்ட தற்கொலை முறை:

ஜோதிமணி மிகவும் விபரீதமான முறையில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளத் திட்டமிட்டார். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் மூலமாக ‘நைட்ரஜன்’ வாயு உருளையை ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தனது அறைக்குச் சென்ற அவர், தனது தலையில் பாலிதீன் கவரை வைத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டார். பின்னர், சிலிண்டரில் இருந்த டியூப் மூலம் நைட்ரஜன் வாயுவை அந்தப் பாலிதீன் கவருக்குள் செலுத்தி அதனைச் சுவாசித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு அவர் சுயநினைவின்றி மயங்கி விழுந்தார்.

மீட்புப் போராட்டமும் மரணமும்:

அறையில் மகன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் வசந்தா, உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதிமணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஜோதிமணியின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லண்டன் கனவு ஒரு இளைஞனை இத்தகைய விபரீத முடிவிற்குத் தள்ளியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

Follow Us