AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுகவின் தற்போதைய நிலைக்கு உதயநிதி தான் காரணம்!”.. மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் சாடல்!!

Manickam Tagore Slams Udhayanidhi Stalin: "திமுகவின் வீழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறிய பேச்சுக்களே காரணம்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளை அவமதித்ததாலும், பெண்களின் ஆதரவை இழந்ததாலும் வரும் இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

“திமுகவின் தற்போதைய நிலைக்கு உதயநிதி தான் காரணம்!”..  மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் சாடல்!!
உதயநிதி, மாணிக்கம் தாகூர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Oct 2026 08:36 AM IST

சென்னை, அக்.02: தமிழக அரசியல் களம் இடைத்தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தலைவர்களின் காட்டமான விமர்சனங்களால் நாளுக்கு நாள் சூடேறி வருகிறது. ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பிரசாரக் களம் தீவிரமடைந்துள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தனது அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். திமுகவின் பிரசார உத்திகள், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் மற்றும் பாஜக தலைவர்களின் அறிக்கைகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக சரிவு.. தவெக அரசை சுழன்றடிக்கும் புதிய சிக்கல்!!

திமுகவின் பிரசார நாடகம் மற்றும் கூட்டணிச் சூழல்:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், பிரசாரக் களத்தில் திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கண்டித்தார். “அவர்கள் பிரசாரம் செய்தால் அது பிரசாரம், மற்றவர்கள் மக்களிடம் சென்று பிரசாரம் செய்தால் அது நாடகமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், தாராபுரத்தில் நடைபெற்றது அரசியல் நாடகம் என திமுக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். மேலும், தேர்தல் போட்டிப் களத்திலேயே இல்லாதவர்கள் கதைகளை அளந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காகவே திமுகவும் இடதுசாரி கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டிருப்பதாகக் கிண்டல் செய்தார்.

“திமுக வீழ்ச்சிக்கு உதயநிதியே காரணம்”:

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களின் ஆதரவைப்பெற சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த அரசியல் சொத்து அனைத்தையும், உதயநிதி ஸ்டாலின் தனது வரம்புமீறிய மற்றும் ஆபாசமான பேச்சுக்களால் அழித்துவிட்டார் என்று மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். அண்ணா உருவாக்கிய இயக்கம் மக்களிடமிருந்து வெகுதொலைவு விலகிச் செல்வதற்குக் கடைசி அத்தியாயத்தை உதயநிதி ஸ்டாலின்தான் எழுதி வருகிறார் என்று விமர்சித்த அவர், கூட்டணி கட்சிகளை அவமதித்தது மற்றும் பெண்களின் ஆதரவை இழந்தது ஆகிய இரண்டு காரணங்களால் இடைத்தேர்தலில் திமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும், கூட்டணி பலம் இல்லாத திமுகவின் உண்மையான வாக்கு வங்கி தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!

எச்.ராஜா, ராகுல் காந்தி குறித்து கருத்து:

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குறித்துப் பேசிய அவர், “காரைக்குடி மக்களால் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்ட எச்.ராஜாவின் பேச்சுக்களை மக்கள் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை, எனவே அவரது கருத்துகளுக்குப் பதில் அளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து, அகில இந்திய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள மம்தா பானர்ஜியின் கருத்துக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி மட்டுமே நாட்டை வழிநடத்தத் தகுதியான தலைவர் என்றும் வலியுறுத்தினார்.

Follow Us