மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு – யார் இந்த விஸ்வநாதன்? வெளியான விவரம்
Congress Candidate Announced : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது மதுரை மேலூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, ஏப்ரல் 5 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் கூட அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பதில் கட்சியில் குழப்பம் நீடித்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2, 2026 அன்று 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமம வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் மதுரை மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டியிடவிருப்பதாக அக்கட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




யார் இந்த விஸ்வநாதன்?
மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பொது தொகுதியில் போட்டியிட பட்டியல் இனத்தவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர், தெலங்கானா மாநில பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : புதுச்சேரி தேர்தல் களம்.. பாஜக, காங்கிரஸ், தவெகவின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்.. ஒரு விரிவான பார்வை!
காங்கிரஸ் சார்பில் வெளியான அறிவிப்பு
The Central Election Committee has approved the candidature of Shri P. Viswanathan as Congress candidate for the ensuing general election to the Legislative Assembly of Tamil Nadu from 188- Melur constituency. pic.twitter.com/O6ZxFoduPS
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 5, 2026
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கடந்த வாரம் மேலூர் தொகுதியில் உள்ளூர்காரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வெளியூர்காரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கேற்ப தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனி உரிமைத்துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் மற்றும் சிவங்கையை சேர்ந்த சி.ஆர்.சுந்தராஜன் ஆகியோருக்கு இடையே மேலூர் தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிக்க : “பனையூர் வாசலில் நிற்கப் போகிறீர்களா?”.. பெரம்பூரில் விஜய்க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் காட்டம்..
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30, 2026 அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4. 2026 அன்று நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த நிலையில், திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.