AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக பொதுச்செயலாளர் ராஜ்மோகனின் சொத்துமதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்

Rajmohan Asset Details: தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தமிழக சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். இந்த நிலையில் ஏப்ரல் 5, 2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தவெக பொதுச்செயலாளர் ராஜ்மோகனின் சொத்துமதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்
விஜய் - ராஜ்மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Apr 2026 16:15 PM IST

இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் மட்டும் கூடுதல் கவனம் பெற்றிருப்பதற்கு காரணம் முதன்முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்பது தான். இந்த தேர்தலில் தனித்து களம் காணும் தவெகவில் பாதிக்கும் மேல் முன் அனுபவம் இல்லாத வேட்பாளர்கள் தான் போட்டியிடுகிறார்கள். இதனால் கட்சியின் ஒரே முகமாக விஜய் மட்டுமே இருக்கிறார். ஆனால் அரசியல்வாதியாக அவரது செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்பட்டாலும், அவர் செல்லும் இடம் எல்லாம் மக்கள் ஏகோபித்த ஆதரவு அளிப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

ராஜ்மோகனின் சொத்துமதிப்பு இவ்வளவா?

அந்த வகையில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் போட்டியடவிருக்கிறார். இந்த நிலையில் அவர் ஏப்ரல் 5, 2026 அன்று எழும்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். தற்போது அது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!

கடந்த 5 ஆண்டுகளில் அவர் வருமான வரி செலுத்திய விவரங்களையும் வெளியிட்டிருக்கிறரார்.அதில் தனது வருமானத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2020 -21 நிதியாண்டில் 7,35,45 ரூபாயும், 2021 – 22 நிதியாண்டில் 8,09,420 ரூபாயும், 2022 – 23 நிதியாண்டில் ரூ.11,38,610 ரூபாயும், 2022 – 23 நிதியாண்டில் ரூ. 11,38,610, 2023 – 24 நிதியாண்டில் 9,20,360 ரூபாயும், 2024 – 25 நிதியாண்டில் 23,70,280 ரூபாயும் வருமானமாக பெற்றிருக்கிறார்.

மேலும் ராஜ்மோகனின் கையில் ரூ.1,00,000, அவரது மனைவியிடம் ரூ.10,000 ரொக்கமாக இருப்பதாகவும் இவர்கள் இருவரது கணக்கில் ரூ.1,20,000 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ராஜ்மோகன் தன் பெயரில் ரூ.10,00,000 லட்சத்துக்கு எல்ஐசி பாலிசி எடுத்திருக்கிறார். மேலும் யாருக்கும் கடன் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிக்க : 200 யூனிட் இலவச மின்சாரம்- ரூ.25000 உதவித்தொகை… தவெக தேர்தல் வாக்குறுதிகள்… விஜய் மாஸ் அறிவிப்பு!

ராஜ்மோகனிடம் 400 கிராம் தங்கம் இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ.54,00,000 என்றும் வெள்ளி 2 கிலோ இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ.4,9,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவியிடமும் 400 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்பில் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பைர் ,கார் ஒன்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.7 லட்சம் மதிப்பில் 1,200 சதுர அடி நிலம் வைத்திருக்கிறார். குடியிருப்பு வளகாத்தில் அவருக்கு 583 சதுர அடி மதிப்பில் வீடு உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.39 லட்ச ரூபாய் ஆகும். மேலும் எச்டிஎஃப்சி வங்கியில் அவருக்கு ரூ. 27 லட்சத்துக்கு கடன் பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us