கோவை மக்கள் நிம்மதி.. 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
Coimbatore Toll Plaza Closed : கோவை மாவட்டத்தில் எல் அண்டி டி சாலையில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருவழிச்சாலையாக உள்ள எல் அண்டி டி சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் சுங்கச்சாவடிகள் மூடல்
கோவை, ஜூலை 26 : கோவை மாவட்த்தில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் (Coimbator L&T Bypass Road) உள்ள ஐந்து சுங்ச்சாவடிகளை (Coimbatore 5 Toll Plaza Closed) நிரந்தரமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாலை பணி நடைபெற உள்ளதாகல், ஐந்து சுங்கச்சாவடிகளை 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுக்கரை சுங்கக்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்தப்படியாக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பது கோயம்புத்தூர். கோயம்புத்தூர் மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் மக்கள் தொகை பெருபெருக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், கோவையில் உள்ள அனைத்து சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில், நீலாம்பூரில் இருந்து மதுக்கரை செல்லும் வகையில், 26 கிமீ தூரத்துக்கு உள்ள இருவழிச்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த சாலையை எல் அண்டு டி நிறுவனம் பராமரித்து வருகிறது. 1999ஆம் ஆண்டு முதல் இந்த சாலை பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கியமான சாலை. இந்த பைபாஸ் சாலையில் நகரத்திற்குள் வராமல், திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றனர்.
Also Read : சென்னை மக்களே அலர்ட்… 17 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?
5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்
மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலை தற்போது வரை இருவழிச்சாலையாகவே உள்ளது. இதில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதால், நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கோவை மக்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கையை அடுத்து, இந்த சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கோவை மாவட்ட நிர்வாகம் தயாரித்துள்ளது. இதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், எல் அண்டு டி சாலையில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகள் மூடப்படுகிறது. இந்த சாலையில் 6 சுங்கச்சாவடிகள் உள்ளன.
Also Read : அப்படிப்போடு.. டிசம்பரில் விடிவுக்காலம்.. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இதில், தற்போது ஒன்று மட்டுமே செயல்பட உள்ளது. அதன்படி, நீலாம்பூர் சுங்கச்சாவடி, சிந்தாமணிபுதூர் அருகே உள்ள 2 சுங்கச்சாவடி என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் மூடப்படுகிறது. இதன் மூலம், 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி மதுக்கரை சுங்கக்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எல் ஆண்டு டி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதற்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.