தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!

Covai College Student Harassment Case : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரில் இருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடை வழக்கில் வருகிற மார்ச் 7- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு... மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!

கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

Published: 

27 Feb 2026 19:18 PM

 IST

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் ஒண்டிப்புதூரை சேர்ந்த 25 வயது ஆண் நண்பருடன், 20 வயது கல்லூரி மாணவி காரில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், அந்த ஆண் நண்பரை அறிவாளால் தாக்கி விரட்டி விட்டு, அந்த கல்லூரி மாணவியை தரவென இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த சதிஷ் என்ற கருப்பசாமி ( 30 வயது), காளி என்ற காளீஸ்வரன் (21 வயது), மற்றும் இவர்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி ( 20 வயது) ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

112 சாட்சிகளிடம் விசாரணை

பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கானது கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி 2- ஆம் தேதி முதல் அரசு தரப்பு விசாரணை நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 112 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

மேலும் படிக்க: படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..

வன்கொடுமை வழக்கில் மார்ச் 7- இல் தீர்ப்பு

இந்த நிலையில், கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகிற மார்ச் 7- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்த இந்த சம்பவத்தில் வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை காரில் அழைத்து சென்று ஆடைகளை களைந்து பாலியல் சித்திரவதை அளித்ததுடன், தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

பொள்ளாச்சி வழக்கில் வழங்கிய தண்டனை போல

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கோவை நீதிமன்றம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருந்தது. இதே போல, கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பள்ளி மாணவர்களிடேயே ஏற்பட்ட தகராறு… சிறுவனை கொலைசெய்த மர்ம கும்பல்

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..