AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நண்பனின் தங்கை மீது காதல்.. இளைஞர் அடித்துக் கொலை.. கிணற்றில் வீசப்பட்ட சடலம்.. கோவையில் பயங்கரம்!!

போலீசார் கண்ணனின் மரணம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியபோது, கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் கண்ணனை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தனர். அந்த நபர்களைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணன் படுகொலை செய்யப்பட்டதற்கான அதிர்ச்சிப் பின்னணி வெளிவந்தது.

நண்பனின் தங்கை மீது காதல்.. இளைஞர் அடித்துக் கொலை.. கிணற்றில் வீசப்பட்ட சடலம்.. கோவையில் பயங்கரம்!!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jun 2026 08:57 AM IST

கோவை, ஜுன் 19: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, நண்பனின் தங்கையைக் காதலித்த காரணத்திற்காக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் நண்பர்கள் உட்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் மணிநகர் அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில், இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றில் இருந்து மிகவும் அழுகிய நிலையிலிருந்த இளைஞரின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியதில், உயிரிழந்த நபர் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரிசியனான கண்ணன் என்பது அடையாளம் காணப்பட்டது.

கொலையின் பின்னணியும் கூட்டுச் சதியும்:

போலீசார் கண்ணனின் மரணம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியபோது, கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் கண்ணனை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தனர். அந்த நபர்களைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணன் படுகொலை செய்யப்பட்டதற்கான அதிர்ச்சிப் பின்னணி வெளிவந்தது.

உயிரிழந்த கண்ணனும், பாரதிராஜா என்பவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இதற்கிடையே, எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்த கண்ணனுக்கும், கல்லூரியில் படித்து வந்த பாரதிராஜாவின் தங்கைக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தன் தங்கையை நண்பனே காதலிப்பதைக் கண்டு பாரதிராஜா கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

தோட்டத்து வீட்டில் நடந்த ‘பஞ்சாயத்து’:

கண்ணனைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்ட பாரதிராஜா, தனது நண்பர்களான வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரை அனுப்பி, நியூ அம்மன் நகர் ஐயர் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு கண்ணனை அழைத்து வரச் சொல்லியுள்ளார்.

அங்கு பாரதிராஜா மற்றும் அவரது இதர நண்பர்களான ருத்தீஷ், நசீர் உசேன் ஆகியோர் முன்னிலையில் கண்ணனிடம் ‘பஞ்சாயத்து’ பேசியுள்ளனர். “ஏன் பாரதிராஜாவின் குடும்பப் பெயரைக் கெடுக்கிறாய்? இந்த காதலை இத்தோடு விட்டுவிட்டு ஒழுங்காக இரு” என்று நண்பர்கள் அனைவரும் கண்ணனை மிரட்டியுள்ளனர். அதற்கு கண்ணன், “நான் அப்படித்தான் பேசுவேன், உங்களால் என்ன செய்ய முடியும்?” என எதிர்த்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

பிடிவாதம் காட்டியதால் அடித்துக் கொலை:

கண்ணன் தங்களை எதிர்த்துப் பேசியதால் ஆத்திரமடைந்த நண்பர்கள் கும்பல், அவரை ஓங்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்து, அங்கிருந்த தோப்பிலுள்ள கிணற்றில் சடலத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனின் நண்பரான பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க: சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!

மேலும், இக்கொலையில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக இருக்கும் மணிகண்டன் என்ற நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நண்பனின் தங்கையைக் காதலித்ததற்காக, நண்பர்களே கூட்டுச் சேர்ந்து வாலிபரைக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us