CM Vijay Swearing-in Ceremony : விசிக உள்ளிட்ட 5 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் விஜய்.. இன்று பதவி ஏற்கிறார்!
TVK Leader Vijay To Form Government With 5 Parties Support | 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும்பான்மை பெற்று இன்று முதல்வராக பதவி ஏற்கிறார் விஜய்.
சென்னை, மே 10 : தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) ஒரு வரலாற்று திருப்பமாக அமைந்துள்ளது. காரணம், இந்த தேர்தலில் எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறதா நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மற்றும் ஆதரவு மூலம் ஆட்சி அமைய உள்ளது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிகப்படியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், வெளியே இருந்து ஆதரவு பெற்று இன்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பதவி ஏற்க உள்ளது குறித்தும், அவருக்கு எந்த எந்த கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் இணைந்த காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியாக தவெக 108 இடங்களை மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தொங்கு சட்டசபை ஏற்பட்டது. ஆட்சி அமைக்க அந்த கட்சிக்கு கூடுதலாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் தான் 10 ஆண்டுகாள நட்பு உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணைந்தது. இதன் மூலம் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்த்தது. அப்போதும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு 5 இடங்கள் தேவையாக இருந்தது.
இதையும் படிங்க : வெளியான தவெகவின் உத்தேச அமைச்சர் பட்டியல் – விஜய்க்கு என்னென்ன துறை?




ஆட்சி அமைக்க துணை நின்ற இடது சாரிகள்
இந்த நிலையில் தான் தவெக தரப்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சில கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் பக்கம் தவெகவின் கவனம் திரும்பியது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் வழங்கியது.
இதையும் படிங்க : பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் – தவெகவிற்கு ஆளுநர் கெடு
பெரும்பான்மை இல்லாததன் காரணமாக தவெக ஆட்சி அமைப்பதில் தொடர் சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், தவெக ஆதரவு நிலைப்பாட்டை கட்சிகள் எடுக்க தொடங்கின. முதலில் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கு அதிகாரத்தை முடிவு செய்யும் மிகப்பெரிய சக்தியாக விசிக உருவெடுத்தது. விசிகவின் முடிவுக்காக தமிழகமே காத்திருந்தது. இந்த நிலையில் தான் தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சியும் ஆதரவு கரம் நீட்டியது.
வெளியே இருந்து மட்டுமே ஆதரவு
காங்கிரஸ் கட்சியை போல கூட்டணி இல்லாமல் வெளியே இருந்து மட்டும் ஆதரவு அளிப்பதாக விசிக, ஐயுஎம்எல் மற்றும் இடதுசாரிகள் அறிவித்துள்ளன. அதுமட்டுமன்றி, திமுக உடனான கூட்டணியிலேயே தாங்கள் தொடர்வதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அரசு அமைக்க மட்டுமே ஆதரவு என்றும், முன்பை போலவே திமுகவுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தவெக தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள விழாவில் தமிழகத்தின் 17வது முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.