AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை.. மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் விஜய் உத்தரவு

கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த காவல், வருவாய், வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், எல்லையோர மாவட்டங்களிலும் தொழில்துறை பகுதிகளிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை.. மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் விஜய் உத்தரவு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jun 2026 19:56 PM IST

ஜூன் 29, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, “பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது” என்றும், திங்கட்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் காலை நேரத்தில் கட்டாயம் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடிப்படை சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்:

மக்கள் வெளிப்படையான, நேர்மையான மற்றும் ஊழலற்ற சமூகநீதிக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை மற்றும் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை சேவைகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், அதேநேரத்தில் நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க: இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஆட்சியர்கள் மனுக்களைப் பெறுவது மட்டுமல்லாமல், அவற்றின் மீது தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை:

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி, போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்ஸோ (POCSO) வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்க முடியாது என்றும், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ, தாமதப்படுத்தவோ கூடாது என்றும் எச்சரித்தார்.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்கள், விபத்து அதிகம் நிகழும் சாலைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்:

கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த காவல், வருவாய், வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், எல்லையோர மாவட்டங்களிலும் தொழில்துறை பகுதிகளிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இயற்கைப் பேரிடர் காலங்களில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மை அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம்; தனிநபர்களின் தலையீடு இருக்காது என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்தார்.

Follow Us