AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றியிருக்க வேண்டும். அவர்கள் செய்த சேவைகள் தெளிவாக நிரூபிக்கக்கூடியதாகவும், அதன் தாக்கம் அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடையே உள்ள நற்பெயர் மற்றும் சமூக செல்வாக்கும் விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jun 2026 18:28 PM IST

ஜூன் 29, 2026: 2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணி கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக வளர்ச்சி மற்றும் பொதுநலனுக்காக தன்னார்வத்துடன் சிறப்பான சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது:

இந்த விருது, 15 முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1, 2025 (01.04.2025) அன்று 15 வயது நிறைவடைந்தவராகவும், மார்ச் 31, 2026 (31.03.2026) அன்று 35 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: ஒரு தலை காதலால் வந்த வினை.. கோவையில் வாலிபரின் அதிர்ச்சி முடிவு.. பரபரப்பு பின்னணி!

மேலும், 2025–2026 நிதியாண்டில், அதாவது 01.04.2025 முதல் 31.03.2026 வரை சமூக நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே விருதுக்கான பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்க தகுதி என்ன?

விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிக்கும் நாளுக்கு முன்பாக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். இதற்கான உரிய இருப்பிடச் சான்றிதழை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றியிருக்க வேண்டும். அவர்கள் செய்த சேவைகள் தெளிவாக நிரூபிக்கக்கூடியதாகவும், அதன் தாக்கம் அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடையே உள்ள நற்பெயர் மற்றும் சமூக செல்வாக்கும் விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அதேநேரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இணையதளமான www.sdat.tn.gov.in வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 6, 2026 மாலை 5.45 மணி என்பதால், தகுதியுள்ள இளைஞர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow Us