தீபாவளி பண்டிகையில் தமிழகத்தில் பரவலாக மழை.. வானிலை ஆய்வு மையம்!
Rain Alert For Tamil Nadu On Diwali Day | தமிழகத்தில் இன்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பரலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், எந்த எந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 08 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) தெரிவித்துள்ளது. இன்று தீபாவளி பண்டிகையை (Diwali Festival) பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், இன்று எந்த எந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகையில் தமிழகத்தில் பரவலாக மழை
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலோ ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கிவிட்டன. தீபாவளி பண்டிகையை சிறப்பாக்குவதே பட்டாசு தான். இந்த நிலையில், தொடர் மழை பெய்யும் பட்சத்தில் பட்டாசு வெடிக்க முடியாமல் போய்விடும். எனவே, இன்றைய மழை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : மதுரையில் நவம்பர் 13 முதல் புத்தகத் திருவிழா.. 200க்கும் மேற்பட்ட அரங்குகள்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இன்றைய மழை நிலவரம்
தீபாவளி பண்டிகையான இன்று சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக எழும்பூர், கோயம்பேடு, பூந்தமல்லி, புரசைவாக்கம், சென்டிரல், அண்ணாசாலை, கீழ்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை – ஏற்காட்டில் வீசப்பட்ட உடல் பாகங்கள் – பகீர் தகவல்கள்
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும்
இன்றைய மழை நிலவரம் குறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தீபாவளி நாளான இன்று மொத்தம் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், அவற்றில் 8 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில் தான், தற்போது மழை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
காலை முதலே பரவலாக பெய்து வரும் மழை
தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராம்நாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான், சென்னையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.