AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைஃபை.. சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு..

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பொதுமக்கள் தங்கு தடையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர்தர இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைஃபை.. சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Aug 2026 09:02 AM IST

ஆகஸ்ட் 8, 2026: சென்னையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மற்றும் வந்து செல்லும் பகுதிகளில் இலவச அதிவேக வைஃபை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக இணைய சேவை வழங்குநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் நடைபெற்றது.  சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் கூடும் இடங்களில் இலவச வை-ஃபை:

அதன் அடிப்படையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவான்மியூர், திருவொற்றியூர், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடங்களில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு..

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் சரவணன், ஏர்டெல், ஜியோ, ஹாத்வே மற்றும் ஏசிடி உள்ளிட்ட இணைய சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பொதுமக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் சேவைகளை வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

உயர்தர இலவச வைஃபை வசதி:

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பொதுமக்கள் தங்கு தடையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர்தர இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழனி கோவில் நில மோசடி வழக்கு.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திடீர் உயிரிழப்பு.. மதுரையில் பரபரப்பு!

இதற்காக ஏர்டெல், ஜியோ, ஹாத்வே மற்றும் ஏசிடி உள்ளிட்ட இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை மேற்கொண்டு, தேவையான அறிவுரைகளை வழங்கியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் விரைவில் அதிவேக இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us