திருமண வற்புறுத்தலால் காதலியை கொன்று விபத்து என நாடகமாடிய காதலன் கைது..!

Kanchipuram Love murder: காஞ்சிபுரத்தில் காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கோபமடைந்த காதலன் தீபன், விக்னேஷ்வரியை கொலை செய்துள்ளார். விபத்தாக மாற்ற முயன்றும், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின் தீபன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருமண வற்புறுத்தலால் காதலியை கொன்று விபத்து என நாடகமாடிய காதலன் கைது..!

காதலியை கொன்று விபத்து என நாடகமாடிய காதலன் கைது

Published: 

17 Jun 2025 07:04 AM

 IST

காஞ்சிபுரம் ஜூன் 17: காஞ்சிபுரம் (Kanchipuram) மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரி (vigneshwari) மற்றும் தீபன் 7 ஆண்டுகள் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு தீபன் மறுத்ததையடுத்து விக்னேஷ்வரி வற்புறுத்தினார். 2025 ஏப்ரல் 2ம் தேதி வாக்குவாதத்தின் போது தீபன், சுத்தியால் தாக்கி கொலை செய்தார். பின்னர் விபத்து போல் மேட்படுத்த அவர் சடலத்தையும் ஸ்கூட்டியையும் டிரான்ஸ்பார்மருக்கு அருகே விட்டுவிட்டார். போலீசார் சைபர் டிரேசிங் (cyber Crime Poilce) மூலம் தீபனை தேடி, தேவகோட்டையில் காதலன் தீபனை (Arrested Lover Deepan) 2025 ஜூன் 16 ஆம் தேதி கைது செய்தனர். ஒப்புதல் வாக்குமூலம் அளித்த தீபன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலைக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தீபனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அலுவலகத்தில் அறிமுகமான இருவரும் பின்னர் வேறு நிறுவனங்களில் வேலை செய்து காதலைத் தொடர்ந்து வைத்திருந்தனர்.

திருமணம் குறித்து பெரும் மன அழுத்தம்

வீட்டில் விக்னேஷ்வரிக்காக வரன்கள் வர, அவளது தாயார் புஷ்பா திருமணத்தைக் கடிதமாக்க முயன்றார். ஆனால் விக்னேஷ்வரி அதை மறுத்து தீபனை திருமணம் செய்ய வற்புறுத்தினார். தீபன் மறுத்ததால் இருவருக்கும் இடையே பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது.

கொலைக்கு முந்தைய நாட்கள்

2025 ஏப்ரல் 1ஆம் தேதி விக்னேஷ்வரியை தாம்பரத்தில் உள்ள அறைக்கு அழைத்து சென்ற தீபன், ஷாப்பிங் செய்து புடவை பரிசளித்து வீட்டருகே விட்டுச் சென்றார். இதை பார்த்த அவரது தாய் கடுமையாக கண்டித்ததையடுத்து விக்னேஷ்வரி வீட்டில் சண்டையிட்டுப் போய்விட்டார்.

கொலை செய்த நாள் – ஏப்ரல் 2:

விக்னேஷ்வரி தீபனை மீண்டும் சந்தித்து, திருமணத்தைக் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் கொந்தளித்த தீபன், 2025 ஏப்ரல் 2 தேதி விக்னேஷ்வரியை முதலில் அறைந்தார், பின்னர் சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர், விபத்தாக காட்ட டிரான்ஸ்பார்மருக்கு அருகே சடலத்தையும் ஸ்கூட்டியையும் அமர்த்தி வைத்தார்.

பொய்யான நாடகம் – போலீசாரின் சந்தேகம்

தீபன் போலீசாரிடம் விக்னேஷ்வரி விபத்தில் இறந்ததாக கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ்வரியின் தங்கை இடம் போலீசார் விசாரித்த போது இருவரின் காதல் தொடர்பும், கடைசி பேச்சுக்களும் வெளிவந்தன. இதையடுத்து தீபன் தலைமறைவானார். சைபர் டிரேசிங் மூலம் செங்கல்பட்டுவில் இருந்த தீபன், இறுதியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் மற்றும் தாக்கம்

தீபன், “திருமணத்திற்காக வற்புறுத்தியதால் தான் கொலை செய்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்பொழுது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்றோர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..