Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிஎல்ஓக்களை திமுகவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை

BJP Annamalai: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. கடும் எதிர்ப்பையும் மீறி நடந்து வரும் இப்பணிகளுக்கு, தங்களுக்கு அதிக பணிசுமை தரப்படுவதாக பல்வேறு மாநிலங்களிலும் பிஎல்ஓக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிஎல்ஓக்களை திமுகவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை
அண்ணாமலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2025 07:32 AM IST

சென்னை, நவம்பர் 22: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓக்கள்) மீது ஆளும் திமுகவின் தாக்கம் இல்லாமல், அவர்கள் சுதந்திரமாக செயல்படும்படி பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நவ.4 முதல் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஒரு மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், அரசியல் கட்சிகளும் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நேற்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் 94.74% SIR படிவங்கள் விநியோகம்.. தேர்தல் ஆணையம் தகவல்

BLO-க்களை திமுகவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்:

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிஎல்ஓக்கள் மீது ஆளும் கட்சியின் தாக்கம் இல்லாமல், அவர்கள் சுதந்திரமாக செயல்படும்படி பாதுகாக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் முறையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “இந்தியாவில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் மிக அதிகளவில் இயக்கப்படுகின்றன. திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தவர்களாக இருந்தாலும், அதிக சமஸ்கிருத பல்கலைக்கழகங்களைத் திறந்தது அவர்களே. அதனால் தான் அந்த துறைக்கு அதிக நிதி செலுத்தப்படுகிறது” என்றார்.

தமிழ் பல்கலைக்கழகங்கள் குறித்து பேசும் போது,“பீகார், கவுகாத்தி, டெல்லி போன்ற நகரங்களில் புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் தொடங்க மத்திய கல்வி அமைச்சகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். தமிழை ‘செத்துப் போன மொழிஎன குறைக்கும் உதயநிதியின் கருத்து கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது” என்று தெரிவித்தார்.

தேர்தலை சந்திக்க திமுகவுக்கு பயம்:

அவர் மேலும் கூறியதாவது,“முதல்வரும் துணை முதல்வரும் தாங்கள் சாதனை செய்ததாக காட்ட எதுவும் இல்லாததால் தேர்தலை சந்திக்க அவர்களுக்கு பயம் தோன்றுகிறது” என்றார். அதோடு, நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு வழங்கிய ரூ.360 கோடியை திமுக அரசு முறைகேடாக பயன்படுத்தியுள்ளது. நெல் ஈரப்பதம் அதிகரித்ததற்கும் மாநில அரசின் தவறுகளே காரணம் என்றார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. சுகாதார துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..

 மதுரை, கோவை மெட்ரோ:

“மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரிக்கவில்லை. ஆனால் நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய தகவல்களை மாநில அரசு வழங்கவில்லை; மாறாக தவறான தரவுகளையே சமர்ப்பித்துள்ளது. அதனால் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது” என்று அவர் விளக்கமளித்தார்.