Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் 94.74% SIR படிவங்கள் விநியோகம்.. தேர்தல் ஆணையம் தகவல்

தமிழ்நாடு முழுவதும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், 13.02% விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமய் வருவாய்துறையில் தமிழகத்தில் SIR பணிகளை புறக்கணித்துள்ளனர். இதனால், பல்வேறு பகுதிகளில் எஸ்ஐஆர் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 94.74% SIR படிவங்கள் விநியோகம்.. தேர்தல் ஆணையம் தகவல்
SIR படிவம் விநியோகம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Nov 2025 11:28 AM IST

சென்னை, நவம்பர் 19: தமிழ்நாட்டில் இன்று வரை 6.07 கோடி பேருக்கு (94.74 சதவீதம்) வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முடிக்க ஒரு மாதம் மட்டுமே தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து, டிச.4ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும். இதையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். இன்னும் 14 நாட்களே மீதமுள்ள நிலையில், பிஎல்ஓக்கள் SIR படிவங்களை இரவு, பகலாக வார விடுமுறை உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாது விநியோகித்து வருகின்றனர்.

Also read: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..

பணிச்சுமையில் பிஎல்ஓக்கள்:

இதன் காரணமாக ஏற்பட்ட கடும் பணிச்சுமையால் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரளாவில் மாநிலம் முழுவதும் SIR பணிகளை புறக்கணித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிக பணிச்சுமையை தந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும், இதன் காரணமாகத்தான் பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டார் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் SIR பணிகள் புறக்கணிப்பு:

இதனிடையே, தமிழகத்திலும் அதீத பணிச்சுமை காரணமாக SIR பணிகளை வருவாய்த்துறை புறக்கணித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராம உதவியாளர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள், நிலைய அலுவலர், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் கிட்டதட்ட 18,500 பேர் முழுமையாக புறக்கணித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் வாக்காளர் கணக்கீட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Also read: “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்

94.74% SIR படிவங்கள் விநியோகம்:

அதேசமயம், தேர்தல் ஆணையம் தரப்பில், தமிழ்நாடு முழுவதும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 6.07 கோடி வாக்காளர்களுக்கு, அதாவது 94.74% பேர் வரை கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு, திரும்பப் பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.02% என குறிப்பிடப்பட்டுள்ளது. 83.45 லட்சம் படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

BLO-க்கள் பணி என்ன?

BLO-க்களுக்கு ஏற்கனவே இரண்டு கணக்கீட்டு படிவங்கள் (Form 1A & 1B போன்றவை) வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் சந்தேகங்களை நேரடியாக விளக்குதல், படிவங்களை பூர்த்தி செய்ய உதவுதல், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறுதல் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

படிவத்தை பெற்றதற்கான ஒப்புதல் சீட்டு (Acknowledgement Slip) வாக்காளருக்கு வழங்கப்படுகிறது. பெறப்பட்ட அனைத்து விவரங்களும் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் BLO மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.