Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, எங்களோடு சில கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன. அநேகமாக டிசம்பர் அல்லது ஜனவரியில் மாத முடிவு யாருடன் கூட்டணி அமைக்கிறோம் என்பது தெரிந்துவிடும். உறுதியாக தவெக கூட்டணி அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.

“2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Nov 2025 11:00 AM IST

சென்னை, நவம்பர் 16: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு, மாவட்டங்களில் தற்போது அமமுக சொல்வாக்கு எப்படி உள்ளது. தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம், எப்படி எதிர்கொள்ளாம் என்று ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வெற்றி பெறும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டுமென நிர்வாகிகள் அனைவரும் டிடிவி தினகரனை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். அதாவது, ஏற்கெனவே அமமுக தவெக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கட்சி நிர்வாகிகளும் அதே நிலைப்பாட்டை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் – வெளியான முக்கிய அறிவிப்பு – எப்படி பெறுவது?

பீகார் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்காது:

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரனிடம் பீகார் தேர்தல் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பீகார் தேர்தலுக்கும், தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. அதனால் அம்மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று சொல்வதை நான் நம்பவில்லை என்றார். மேலும், SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி. தமிழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தான் SIR பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கையில், அனைத்துக் கட்சிகளும் விழிப்புடன் இருக்கும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்துவிட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டிசம்பர் அல்லது ஜனவரியில் கூட்டணி முடிவு:

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருப்பவர்களோடு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறோம். பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காகத்தான் அமமுகவே தொடங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி தொடர்பாக எங்களோடு சில கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன. அநேகமாக டிசம்பர் அல்லது ஜனவரியில் ஒரு முடிவு தெரிந்துவிடும் என்றார்.

மேலும் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக தங்களோடு சில கட்சிகள் பேசிக்கொண்டு இருப்பதாகவும், அது எந்தக் கட்சிகள் என்று இப்போது சொல்வது நாகரிகமாக இருக்காது எனவும் தெரிவித்தார். அதேசமயம், எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை என்றும், அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை எனவும் கூறினார். அதோடு, அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது என்றும், தவெக கூட்டணிக்கு நாங்கள் முயற்சித்து வருவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

மேலும் படிக்க: தவெக மாநில அளவில் போராட்டம் அறிவிப்பு – விஜய் பங்கேற்பாரா?

திமுகதவெக இடையே தான் போட்டி:

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையே தான் கடுமையான போட்டி இருக்கும் என்றார். எங்களைப் பொறுத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான் நிலைப்பாடு. 2021 தேர்தலில் என்டிஏ கூட்டணியில் நாங்கள் இடம்பெற முடியவில்லை என்று கூறிய அவர், அப்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தங்களால் ஜெயிக்க முடியவில்லை என்றும் கூறினார். அதேசமயம், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தோமோ, அது நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.