Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. சுகாதார துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..

Dog Bite Case In Tamil Nadu: தமிழகத்தில் நாய் கடி என்பது தற்போது சாதாரண நிகழ்வாகிவிட்டது. தெரு நாய்கள் மட்டுமல்லாமல் வீட்டு வளர்ப்பு நாய்களும் அவ்வப்போது மனிதர்களை தாக்குவது வழக்கமாகிவிட்டது. 2025 நடப்பு ஆண்டில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. சுகாதார துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2025 07:14 AM IST

சென்னை, நவம்பர் 19, 2025: தமிழகத்தில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மக்கள் வெளியே செல்வதற்கே அச்சம் ஏற்படும் அளவிற்கு இந்த நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில், 2025 நடப்பு ஆண்டில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், நாய் கடியால் ராபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்:

தமிழகத்தில் நாய் கடி என்பது தற்போது சாதாரண நிகழ்வாகிவிட்டது. தெரு நாய்கள் மட்டுமல்லாமல் வீட்டு வளர்ப்பு நாய்களும் அவ்வப்போது மனிதர்களை தாக்குவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக சிறு குழந்தைகள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் நடந்து சென்றாலும், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாலும், சிறுவர்களை தெரு நாய்கள் அதிகமாக தாக்குகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் நாய் கடி சம்பவங்கள் அடிக்கடி அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியே நடமாடுவதற்கே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகமா? சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..

நாய்க்கடி சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை:

தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தெரு நாய்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இலவச தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கும் உரிமம் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வளர்ப்பு நாய்களுக்கு முறையான தடுப்பூசி போடப்பட்டு, மைக்ரோசிப் பொருத்திய பின் உரிமம் வழங்கப்படுகிறது. வரவிருக்கும் நவம்பர் 24, 2025 ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் சுமார் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..

இதற்காக, சென்னை மாநகராட்சி தரப்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தி உரிமம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாகவும் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறலாம்.

நடப்பாண்டில் 5 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு:

இதைத் தவிர, நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி —

2021:

  • 3.19 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு
  • 19 பேர் ராபிஸ் தொற்றால் உயிரிழப்பு

2022:

  • 3.64 லட்சம் பேர் பாதிப்பு
  • 28 பேர் ராபிஸ் தொற்றால் உயிரிழப்பு

2023:

  • 4.41 லட்சம் பேர் பாதிப்பு
  • 18 பேர் ராபிஸ் தொற்றால் உயிரிழப்பு

2024:

  • 4.8 லட்சம் பேர் பாதிப்பு
  • 48 பேர் உயிரிழப்பு

2025 (தற்போது வரை):

  • 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு
  • 28 பேர் ராபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்பு