Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..

Tamil Nadu Weather Alert: 2025 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21, 2025 அன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 19, 2025: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 18, 2025 தேதியான நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது நவம்பர் 19, 2025 அன்று மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரவிருக்கும் நவம்பர் 22, 2025 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு நல்ல மழை பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை:

2025 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 21, 2025 அன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலமாக கிடந்த இளைஞர் – போலீசார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

மேலும் 22 நவம்பர் 2025 அன்று இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 நவம்பர் 2025 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்,

24 நவம்பர் 2025 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தென்காசியில் தொடரும் கனமழை…. குற்றாலம் அருவியில் குளிக்க தடை

குளுகுளுவென மாறிய சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அவ்வபோது விதவிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மாலை முதல் அதிகாலை வரை நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகியுள்ளது.