Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலமாக கிடந்த இளைஞர் – போலீசார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

Youth Found Dead: சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரையில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் முகத்தில் டேப்பால் சுற்றிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலமாக கிடந்த இளைஞர் – போலீசார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Nov 2025 21:27 PM IST

சென்னை நவம்பர் 18: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டிற்கு அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர்  முகத்தில் டேப் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை (Chennai) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) வீடு அமைந்துள்ளது. அவர் வீட்டின்  அருகே புற்கள் நிறைந்த பகுதியில் இளைஞர் ஒருவர் நவம்பர் 18, 2025 இன்று காலை முகத்தில் டேப் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே சடலமாக கிடந்த இளைஞர்

சென்னையில் உள்ள அக்கரை பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் முகத்தில் டேப்பால் சுற்றிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நீலாங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : SIR-ஐ ஆதரிப்பதா? ‘அதிமுக வாக்குகளே காலியாக போகிறது’.. சீமான் பாய்ச்சல்!!

தற்போது இளைஞரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பது தெரியவந்துள்ளது. தற்போது 33 வயதாகும் கலையரசன் தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

காவல்துறையினர் தீவிர விசாரணை

வேலை தேடி கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், கடந்த ஒரு வருடமாக பல இடங்களில் வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று நவம்பர் 18, 2025 காலை அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கலையரசன் தற்கொலை செய்தாரா? யாராவது அவரை கொலை செய்து இங்கு வீசினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார்  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : SIR பணிகள்; அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு

இந்தப் பகுதி முழுவதும் அமைந்துள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். சம்பவத்திற்கு முன் அவருடன் வேறு யாரும் இருந்தார்களா? என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இளைஞரின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.