ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து: 10 பேர் படுகாயம்.. அதிகாலையில் நடந்த துயரம்!!
பெங்களூருவில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 60 பக்தர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்து, முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பூர், நவம்பர் 16: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அந்தவகையில், நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை (நவ.17) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்று வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
மேலும் படிக்க: கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; ஒருவர் பலி..15 பேரின் நிலை என்ன?
சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை:
நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிச.27) நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி நடை திறக்கப்படும். பின்னர் நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறும். அந்தவகையில், நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்யதுள்ளது.




இதற்காக, ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசம்போர்டு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து:
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக 60 பேர் கொண்ட குழுவினர் சொகுசு பேருந்தில் பயணம் செய்தனர். இந்த சொகுசு பேருந்தானது இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து மக்கா சோளம் எற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து அதே சாலையில் முன் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
10 பேர் படுகாயம்:
இந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்து வந்த ஐயப்ப பக்தர்களில் 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான அந்த பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக அந்த தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.