AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!

Puducherry Bjp Candidate LIst : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. எஞ்சிய ஒரு தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார் .

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!
புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 21 Mar 2026 13:49 PM IST

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன. இதில், புதுச்சேர் மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டமன்ற தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகள், அதிமுகவுக்கு 2 சட்டமன்ற தொகுதிகள், லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 20 ) கையொப்பமானது. இந்த நிலையில், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக போட்டியிடக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான 9 வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்.. பெரும் பரபரப்பு!

  • மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் ஏ. நமச்சிவாயம் (மாநில உள்துறை அமைச்சர்)
  • ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் ராமலிங்கம் (புதுச்சேரி மாநில பாஜக தலைவர்)
  • முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஜான்குமார் ( தற்போதைய அமைச்சர்)
  • மணவெளி சட்டமன்ற தொகுதியில் ஆர். செல்வம் ( சட்டப்பேரவைத் தலைவர்)
  • திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் ராஜசேகரன்
  • நிரவி திருப்பட்டணம் சட்டமன்ற தொகுதியில் மீனாட்சி சுந்தரம்
  • மாஹே சட்டமன்ற தொகுதியில் கணேசன் போட்டி
  • ஊசுடு சட்டமன்ற தொகுதியில் தீப்பாய்ந்தான்
  • காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் கல்யாணசுந்தரம் ( தற்போதைய எம்எல்ஏ)

தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்து வேறுபாடு

ஆகியோர் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள ஒரு தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே புதுச்சேரி மாநில அந்தஸ்து, புதிய கட்சியை கூட்டணியை சேர்க்க வேண்டாம் என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நடைபெற இருந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை கூட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி புறக்கணித்திருந்தார். இது தொடர்பாக பாஜக தலைமையிடம் இருந்து, ரங்கசாமியை தொடர்பு கொண்டு சமாதானம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாக வாய்ப்பு

இதில், புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து பரிசீலனை செய்வதாக புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். இதில், ரங்கசாமி சற்று இறங்கி வந்தார். இதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே, என். ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவின் வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: K.N.Nehru Tamil Nadu Election: கே.என்.நேருவின் கோட்டையாக தொடருமா திருச்சி மேற்கு தொகுதி!

Follow Us